இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து, 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.



