மகளிர் டி20 ஆசியா கோப்பை அபார வெற்றி பெற்றது இந்தியா

Published:

18 June03 woman t20 - 2026ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

தொடக்க நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. மிதாலிராஜ் அபாரமாக விளையாடினார். அவர் 69 பந்தில் 97 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இதையடுத்து, 170 ரன்களை இலக்காக கொண்டு மலேசியா விளையாடியது. ஆனால், இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மலேசியா அணி 13.4 ஓவரில் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் 6 பேர் டக் அவுட் ஆனார்கள்.

இந்திய தரப்பில் பூஜா வஸ்தர்கர் 3 விக்கெட்டும், பட்டீல், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும், பாண்டே ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் இந்தியா 142 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img