நெல்லையில் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படும்: எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா !

Published:

nellaisp omprakashmeena - 2026

நெல்லையில் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் கூறினார்.

நெல்லையில் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்மீனா தெரிவித்தார்,

நெல்லையில் நடைபெறும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு மையத்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, நெல்லையில் தேர்வு மையங்கள் நடைபெறும் இடங்கள், எழுதுபவர்கள் , குறித்த புள்ளி விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து.. நெல்லை மாவட்ட காவல் சோதனை சாவடிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு..

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சோதனை சாவடிகளில் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்,

நெல்லையில் பொங்கல் விழாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் ஜாதி மோதல்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், கடந்த வருடம் மோதல்கள் நடைபெற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்,

மேலும் பொங்கல் விடுமுறையில் நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால்.. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img