
காரைக்குடி, ராஜபாளையம், தென்காசி வழியாகத் தாம்பரம் – நெல்லை க்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே ஒரு புதிய சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. காரைக்குடி, ராஜபாளையம், தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் வழியாகத் தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே இந்த அதிரடி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் – திருநெல்வேலி (06111): வரும் நவம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 19:30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 09:20 மணிக்கு நெல்லை சென்றடையும்.
திருநெல்வேலி – தாம்பரம் (06112): மறுமார்க்கமாக, நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 19:00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 09:00 மணிக்குத் தாம்பரம் வந்தடையும். இரு மார்க்கத்திலும் ஒரு சேவை மட்டும் இயங்கும்.
இந்த ரயிலானது திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி வழியாக இயக்கப்படுவது தென் மாவட்டப் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதில் அதிகபட்சமாக 15 ஏசி (3A & 3E) பெட்டிகளும், 3 ஸ்லீப்பர் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (நவம்பர் 5) காலை 8:00 மணிக்கு தொடங்குகிறது!
காரைக்குடி, ராஜபாளையம், தென்காசி மற்றும் நெல்லை மார்க்கமாகப் பயணம் செய்யும் பயணிகள் நாளை காலை 8 மணிக்கு IRCTC-ல் புக்கிங் செய்யலாம் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் சில தீபாவளி சிறப்பு ரயில்கள்!
சென்னை எழும்பூர் – திருச்சி : மெமு ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து நவ.6 வெள்ளி அன்று, மாலை 6.30க்குப் புறப்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு அதிகாலை 4.45க்கு சென்று சேரும் வகையில் ரயில் எண் 06191 – அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் – மானாமதுரை மெமு சிறப்பு ரயில்
தாம்பரத்தில் இருந்து நவ.6 வெள்ளிக்கிழமை இரவு 5.30க்குப் புறப்பட்டு, விழுப்புரம், விருதாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக மானாமதுரைக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45க்கு சென்று சேரும் வகையில் ரயில் எண் 06161 அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கத்தில், ரயில் எண் 06162 – சனிக்கிழமை காலை 6.30க்குக் கிளம்பி, அன்று மாலை 3.45க்கு தாம்பரம் சென்று சேரும் வகையில் மெமு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.



