ஜம்மு காஷ்மீரில் பிராட்பேண்ட் இணையதள சேவை!

இந்தியா தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
cell 1 - 2026

ஜம்மு காஷ்மீரில் 5 மாத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக எல்லோருக்கும் இந்த தடை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இணையத்தில் கருத்து கூறுவது மனிதனின் அடிப்படை உரிமை. கருத்துரிமை என்பது சட்டப்பிரிவு 14க்கு கீழ் வருகிறது. முதலில் காஷ்மீரில் சூழல் எப்படி என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.எந்த வழியும் இல்லை என்றால் மட்டும்தான் இதை தடுக்கலாம் என்று கூறினார். நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த நிலையில் முதல் கட்டமாக தற்போது ஜம்மு காஷ்மீரில் பிராட்பேண்ட் இணையதள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுவதாக இந்த சேவை அனுமதிக்கப்படவில்லை.

மருத்துவமனைகள், டிராவல்ஸ் நிறுவங்கள், தீயணைப்பு துறை, போலீஸ், வங்கிகள் ஆகியோருக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சேவை மிக குறைந்த வேகத்தில் இருக்கும். 2ஜி வேகத்தில் இந்த சேவை செயல்படும். அதே சமயம் இதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது. போஸ்ட் பெய்டு சேவைக்கு மட்டுமே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற கண்டிப்பிற்கு பின் இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அங்கு இன்னும் மக்கள் இணையத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.