பட்ஜெட் திக்.. திக்.! உரையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்!

Published:

president nirmalaseetharaman - 2026

2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்கினார். இதற்காக இன்று காலை நிதி அமைச்சகம் வந்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நிதியமைச்சக இணையமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்~

இன்று காலை 11 மணி அளவில் மத்திய பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத்தொடங்கினார். இது மத்தியில் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட். எனவே நாட்டின் இன்றைய பொருளாதார மந்த நிலை, சூழ்நிலைக்கு ஏற்ப அமையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதாரம், வேலையின்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, வரி வருவாய் குறைவு போன்ற பல்வேறு பிரச்னைகளால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்களும் முக்கிய அம்சங்களும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலகிறது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img