மகளை காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கடிதம் எழுதிய தந்தை!

Published:

corono 2 1 - 2026

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 2,000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 15,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதோடு, தங்கள் நாட்டு மக்களையும் சீனப் பகுதிகளிலிருந்து மீட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஜப்பானை நோக்கி பயணம் செய்த கப்பலில் உள்ள பயணிகள் பலரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கப்பலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கவும் அவர்களது உறவினர்கள் போராடிவருகின்றனர்.

corono q - 2026

கார்னீவல் ஜப்பான் நிறுவனத்தைச் சேர்ந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பல், ஹாங்காங்கிலிருந்து ஜப்பானுக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு பயணத்தைத் தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட சுமார் 3,700 பேர் இந்தக் கப்பலில் இருந்தனர்.

பிப்ரவரி 5-ம் தேதி, ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தை டைமண்ட் பிரின்சஸ் அடைந்தது. பின்னர், கப்பலில் பயணித்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதைத் தொடர்ந்து, கப்பல் யோகோகாமா துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது. கொரோனா எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், கப்பலிலுள்ள 3000 பேரில் சுமார் 600 பேருக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கப்பலில், இந்தியாவைச் சேர்ந்த 138 பேர் உள்ளனர். அவர்களில் 10 பேருக்கு இந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்று உள்ளவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கப்பலிலுள்ள பயணிகள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது பயத்தையும், நிலைமையையும் பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், கப்பலில் சிக்கியுள்ள தன் மகளை மீட்டுத்தர கோரி, இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் தாக்கர் என்பவர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தில், “என் மகள் சோனாலி தாக்கர், யோகோகாமா துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கிறார்.

இந்த வைரஸ் தொடர்பாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். கடந்த 15 நாள்களாக சிறிய அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
corono 3 - 2026

இந்த வைரஸால் பாதிப்படைந்த நபர்களுடன் என் மகளும் இருப்பதால், அவருடைய வாழ்க்கையும் ஆபத்தில் உள்ளது. என்னுடைய மகளை இந்தியாவிற்கு அழைத்துவர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனாலி தாக்கர், கடந்த டிசம்பர் முதல் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பணியாற்றிவருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

சோனாலி தாக்கரும் சில நாள்களுக்கு முன்பு கப்பலில் இருந்து தன்னை மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

இவற்றையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் தாக்கர் பதிவிட்டுள்ளார். இந்தியத் தூதரகம், கப்பலில் பாதிப்பிற்கு உள்ளான இந்தியப் பயணிகளின் உடல்நிலை முன்னேறி வருவதாகத் தகவல் வெளியிட்டது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகள், கப்பலிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்டுவருகிறது.

Related articles

Recent articles

spot_img