கொரோனா: ராஜஸ்தானில் ஒரு பெண் உயிரிழப்பு!

இந்தியா பொது தகவல்கள்
dead body 3 - 2026

ராஜஸ்தானில் 65 வயது பெண் கொரோனா தொற்று நோய்க்கு இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள ராம்கஞ்சைச் சேர்ந்த பெண் புதன்கிழமை எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு, நிமோனியா மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கடந்த 12 மணி நேரத்தில் 26 பேருக்கு புதிதாக கரோனா பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12 பேர் பன்ஸ்வாராவிலும், 8 பேரில் 3 ஜெய்சால்மேர் மற்றும் ஆல்வார், பரத்பூர் மற்றும் கோட்டாவில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 489 பேர் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 168 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.இன்று காலை நிலவரப்படி 26 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.