indo dheepath

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸார் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தில்லியில் பணியாற்றிவந்த இந்தோ-திபெத்திய எல்லை போலீஸார் 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் தில்லி போலீஸாருடன் இணைந்து சட்டம் -ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர், மேலும், இவர்களது படைப்பிரிவில் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending