filim

கேரளாவில் திரைப்படப் பணிகளுக்குப் பகுதியளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங் ஆகிய பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 42,400 கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். மார்ச் 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி நிறைவடையவிருந்தது.

ஆனால், கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராததைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில், பல்வேறு தளா்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, நாடு முழுவதும் சில பொதுவான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதேசமயம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ள மண்டலங்களுக்கு ஏற்றவாறு தளா்வுகள் அமல்படுத்தப்படவுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல்கள் காரணமாக படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சார்ந்த அனைத்துப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரளாவில் மலையாளப் படங்களின் இறுதிகட்டப் பணிகளுக்குக் கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதிகபட்சம் 5 நபர்கள் தேவைப்படும் திரைப்படப் பணிகளை மே 4 முதல் தொடங்கலாம். சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது எனக் கேரள அரசின் பண்பாடு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறினார்.

இதையடுத்து, கேரளாவில் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையினரின் பணிகள் பகுதியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங், ஆகிய பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

திரைப்பட ஸ்டூடியோக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. திரைப்படப் பணிகள் ஈடுபடுவோர் முகக்கவசம் அணிந்து அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

திரைப்படப் படப்பிடிப்பு இல்லாமல், ரீ ரெக்கார்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ‘பெப்சி’ (தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம்) தலைவா் ஆா்.கே. செல்வமணி தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending