கொரோனா: மாநிலவாரியாக பாதிப்பு, உயிரிழப்பு..பட்டியல்!

Published:

corono 9 - 2026

கொரோனா இந்தியாவில் ஏற்படுத்தி வரும் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. இதுவரையில்லாத வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 97 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்து 917 பேர் குணமடைந்துள்ள நிலையில் 44 ஆயிரத்து 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

pattiyal 1 - 2026

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 53 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழோந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 21 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 493 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நேற்று உயிரிழப்பு இல்லாததால் உயிரழந்தோர் 215 ஆக தொடர்கிறது. மேற்கு வங்கத்தில் 14 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் உயிரிழப்பு 73 ஆக தொடர்கிறது. ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆகத் தொடர்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆகவும், ஆந்திராவில் 45 ஆகவும் இருக்கிறது. கர்நாடகா, பஞ்சாப்பில் தலா 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

pattiyal 1 1 - 2026

ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் தலா 9 பேரும், பிஹாரில் 6 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசாவில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 2 பேரும், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,171 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,199 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தில்லியில் 6,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,029 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 8,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 7,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,954 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 3,814 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3,614 பேரும், தெலங்கானாவில் 1,196 பேரும், கேரளாவில் 512 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

உத்தரப் பிரதேசத்தில் 3,467 பேர், ஆந்திராவில் 1,980 பேர், கர்நாடகாவில் 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 861 பேர், மேற்கு வங்கத்தில் 1,939 பேர், பஞ்சாப்பில் 1,823 பேர், ஹரியாணாவில் 703 பேர், பிஹாரில் 591 பேர், அசாமில் 63 பேர், உத்தரகாண்டில் 67 பேர், ஒடிசாவில் 294 பேர், சண்டிகரில் 696 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 157 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 55 பேர், திரிபுராவில் 150 பேர், புதுச்சேரியில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 6 பேர் குணமடைந்தனர். மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை.

மேகாலயாவில் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரத்தில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்”. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Related articles

Recent articles

spot_img