மே 31ஆம் தேதி வரை திருப்பதியில் பக்தர் தரிசனத்துக்கு அனுமதியில்லை!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
08 June24 Tirupathi
08 June24 Tirupathi

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நான்காவது கட்ட ஊரடங்கு உத்தரவுக்கான புதிய வழிகாட்டுதல்களின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தனம் (டி.டி.டி) மே 31 வரை பக்தர்களுக்கான தரிசனத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

திருமலை கோயில் மீண்டும் திறக்கப்படும் வரை, கோயில் ஆகம சாஸ்திரத்தின்படி, நிர்வாகம் வேங்கடேஸ்வரருக்கு அனைத்து சேவைகளையும் சம்பிரதாயங்களையும் முறைப்படி செய்து கொண்டிருக்கும்.

மே 28 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வாரியக் கூட்டத்தில் டி.டி.டி இதன் பிறகு நிலைமைக்குத் தக்க நடவடிக்கை எடுக்கும்.

இதற்கிடையே, COVID-19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் பக்தர்களை அனுமதிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை ஏற்கெனவே செய்துள்ளது.

tirupathi laddu

ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியக் கூட்டம் தீர்மானிக்கும். யாரை அனுமதிக்க வேண்டும், என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்பது குறித்து, TTD இன் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச் 20 முதல் திருப்பதி கோயில் மூடப்பட்டு, ஒரு நாளைக்கு ரூ 5 கோடி மதிப்புள்ள வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 295 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள கடைக்காரர்களும் பிற சிறு வணிகர்களும் தாங்கள் அனுபவித்த வாழ்வாதாரத்தை இழந்ததால் கோயில் சார்பாக தங்களுக்கு ஆதரவளிக்குமாறு டி.டி.டி.யை வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.