யானையின் ஆன்மா சாந்திக்கு வீடுகளில் வழிபாடு நடத்திய மக்கள்!

Published:

elephant in water

கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானையின் ஆன்மா சாந்தியடைய புதுச்சேரியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி பூஜை செய்தனர்.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதியில் உணவு தேடி வெளியே வந்த 15 வயது கர்ப்பம் தரித்த யானை, வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்டு இறந்தது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மேலும், துன்பங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும், இறந்த தாய் மற்றும் குட்டி யானையின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், இதுவரையில் இறந்த யானைகளின் ஆன்மா சாந்தி அடையவும் நேற்று மாலை 6:01 மணி முதல் 6:15 மணிக்குள் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன் ஒரு விளக்கை ஏற்ற வேண்டுகொள் விடுக்கப்பட்டது.

இதனையொட்டி, புதுச்சேரியில் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன் விளக்கேற்றி, இறந்த யானைகளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img