நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

sasikala in jail - 2026

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சிறையில் ஆய்வு மேற்கொண்டு அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. அதில் சசிகலா சிறை அதிகாரிகள், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் அவர் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இதையடுத்து இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டிஐஜி ரூபாவும், புகாருக்கு உள்ளான சத்யநாராயண ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா சிறையில் நைட்டியுடன் உலா வரும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சசிகலாவின் குரல் தெளிவாகக் கேட்கிறது. மேலும் சிறையில் சசிகலாவுக்கு உள்ள வசதிகளும் அந்த வீடியோவில் சுட்டிக் காட்டப்படுகிறது. சிறையில் கைதிகளுக்கான உடையை அணியாமல் சசிகலா நைட்டியுடன் உலா வருவது, டிஐஜி ரூபா சொன்ன குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் உள்ளது…

Video source: Prajaa TV

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.