ஹிந்து தேசியவாதம் சீனாவுக்கான இந்தியக் கொள்கையைக் கடத்தி, போருக்கு வழிவகுக்கிறது!

china india - 2026

ஹிந்து தேசியவாத சிந்தனை இந்தியாவில் அதிகரித்து வருவது, இந்தியாவின் சீனக் கொள்கையை கடத்திவிட்டது, போருக்கு வழிவகை செய்கிறது என சீன ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச் சந்திப்பான டோக்லாம்- டோகாலா பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன.

இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கூறி வருகிறது சீனா. அவ்வாறு வாபஸ் பெறா விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியாவோ, ராணுவத்தை திரும்பப் பெற முடியாது, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் எனக் கூறியது. இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி வரும் சீனா, எல்லையில் அடிக்கடி போர்ப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சீன அரசின் ஊடகத்தில் பல்வேறு ஆத்திரமூட்டும் கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. சீனாவின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்தும் வகையிலான அக்கட்டுரையில் இந்த முறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ளது. இந்தியாவில் ஹிந்து தேசிய வாத சிந்தனை அதிகரித்து வருகிறது எனவும், அது, இருநாட்டுக்கும் இடையில் போருக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைப்பது மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சீன ஆதரவாளர்களிடம் ஹிந்து தேசியவாதத்துக்கு எதிரான மனநிலையைத் தூண்டி, போருக்கு ஆயத்தப் படுத்தும் அறைகூவலை விடுப்பது போன்றதுதான் என இந்திய அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

அதாவது, இந்தியாவில் ஹிந்து தேசியவாத சிந்தனை அதிகரித்து வருவது, இந்தியாவின் சீனாவுடனான கொள்கையைக் கடத்திவிட்டது எனவும், இது போருக்கு வழிவகை செய்யும் எனவும் சீனாவின் அரசு ஊடகம் அப்பட்டமாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்து தேசப்பற்று அதிகரித்து வருவது பிரதமர் மோடியின் சீனக் கொள்கையை கடத்திவிட்டது, இது இருநாடுகள் இடையே போருக்கு வழிவகை செய்யும் என்கிறது சீன அரசு ஊடகத்தின் செய்தி. இந்தியாவுக்கு பெரும் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அது இந்தியாவை எச்சரிக்கிறது. வழக்கம் போல் இந்தியா பலவீனமானது என்றும், சீனா வலிமையானது எனப் பாராட்டுவது போன்றும், இந்திய அரசியல்வாதிகள் அதை உணர்ந்து கொள்ளாமல் உள்ளனர் என்றும் சீன ஊடகம் இந்தக் கட்டுரையில் கருத்து தெரிவிக்கிறது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான ஹிந்து தேசப்பற்றாளர்களின் வன்முறையைத் தடுக்க தவறிவிட்டது என புது வகையில் ஒரு கதையைப் புனைந்துள்ளது. சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் முதல் முறையாக இவ்வாறு கட்டுரை வெளியிட்டு, இந்தியாவின் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தானுடன் தங்கள் நாடும் கைகோர்த்துள்ளதை பலமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், ஹிந்து தேசப் பற்றாளர்களுக்கு தீனி போடவே, இப்போதைய மோதல் திட்டத்தை இந்தியா செயல்படுத்தியுள்ளது எனவும், மோடி அரசு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வலுவான அரசியல் எதிர்ப்புக் கொள்கையின் மூலம் மக்களை திசைதிருப்புகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், பாகிஸ்தானுடன் கைகோத்து சீனா இந்தியாவின் மீது தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories