சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம்! சிகரெட்டால் உடலெங்கும் சுட்டு கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கோலா பகுதியில் ஒரு 13 வயது சிறுமி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார் .கடந்த சனிக்கிழமையன்று அந்த சிறுமியை அவரின் தாயார் செங்கல்சூளைக்கு தண்ணீர் எடுத்து வர சொன்னார் .அதை கேட்ட அந்த சிறுமி ,அங்கிருந்த கைப்பம்பில் தண்ணீர் எடுக்க குடத்தோடு கிளம்பினார் .அப்போது அந்த வழியாக வந்த, அந்த பகுதியை சேர்ந்த இரண்டு பேர் தங்களின் மோட்டார் சைக்கிளில் அந்த சிறுமியை உட்கார வைத்து கடத்தி சென்றனர்

.
அந்த சிறுமியை கடத்தி செல்லும்போது அவர் கத்தி கூச்சலிட்டார் .அப்போது அந்த இரண்டு பேரில் ஒருவன் கையிலிருந்த சிகெரெட்டால் அந்த சிறுமியை சுட்டு காயப்படுத்தினான் .பிறகு அந்த சிறுமி அந்த நெருப்பின் வலி தாங்க முடியாமல் அமைதியாகிவிட்டார் .

பிறகு அந்த இருவரும் தங்களின் செங்கல் சூளைக்கு அந்த சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர் .அப்போது அந்த சிறுமி மீண்டும் கூச்சலிட்டு கத்திய போது மீண்டும் மீண்டும் உடல் முழுவதும் அந்த சிறுமியை சிகெரெட் நெருப்பால் சுட்டு காயப்படுத்தினார்கள் .

இதனால் உடல் முழுவதும் வெந்த நிலையில் சிறுமி அங்கேயே மயக்கமானார் .பிறகு அந்த இருவரும் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்கள் .

பிறகு மயக்கம் தெளிந்த அந்த சிறுமி நேராக தன்னுடைய தாயரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் ,இதனால் அதிர்ச்சியுற்ற அவரின் தாயார் அந்த சிறுமியை நெருப்பு காயத்தோடு அழைத்துச்சென்று காவல் நிலையத்தில் புகாரளித்தார் .புகாரை பெற்ற போலீசார் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .பிறகு அந்த இரு வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.