மனித தலையை சுட்டுக் கொன்ற சைக்கோ!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Screenshot_2020_0817_151239

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரெல்லி வீதி பகுதியில் சுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே உள்ள சந்தில் ஒரு கோனிபை இருப்பதை பார்த்துள்ளார். அதனை திறந்து பார்த்த போது, மனித தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்காமல், வீட்டிற்குள் இருந்தபடி அந்த பையை பார்த்து நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

அப்போது பாழடைந்த வீட்டில் வசித்து வரும் ராஜு என்ற இளைஞர் அந்த பையை எடுத்து செல்வதை சுப்பிரமணியம் பார்த்துள்ளார் . சிறிது நேரம் கழித்து ராஜு வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜுவும் அவனுடன் இருந்த ஒரு பெண்ணும் சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். முதலாவது நகர காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்தில் இருந்த ராஜு மற்றும் அந்த பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பாழடைந்த வீட்டில் ராஜீவுடன் தங்கியிருந்த பெண் யார்? எதற்காக இங்கு தங்கியிருந்தார். மனித தலை மயானத்திலிருந்து கொண்டுவரப்பட்டதா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்து கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ராஜுவின் தந்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். மகனின் நடவடிக்கை பிடிக்காத அவரது தாயார் எலமாச்சி அவனை விட்டு விலகி பழக்கடை வைத்து வேறு இடத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இதனால் தான் ராஜீவ் சைக்கோ போன்று சுற்றி வருவதாகவும், அவ்வப்போது மயானத்திற்கு சென்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மனித தலையை சுட்டு சாப்பிடும் சைக்கோ பற்றிய செய்தி பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.