கட்டணமின்றி உடனே மாற்று சான்றிதழ்! தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு!

Published:

Screenshot_2020_0819_172840

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த ஆண்டிற்கான 1, 6 மற்றும் 9 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி உள்ளது.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனாவால் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பாதிப்பால் பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்க உள்ளனர் என்றும் அதற்காக மாற்று சான்றிதழை பள்ளிகளில் விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால் எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் மாற்று சான்றிதழை வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img