பெற்ற மகளை ரூ. 2.70 லட்சத்திற்கு விற்ற பெற்றோர்! 13 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai

ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்ரனா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது லால் என்பவர் உத்தரபிரதேசத்தின் சோன்பாதரில் வசிக்கும் 13 வயது சிறுமியை அவரின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் 2.70 லட்ச ரூபாய்க்கு விலைக்கு வாங்கி , அந்த சிறுமியை ஊரார்கள் முன்னிலையில் திருமணமும் செய்து கொண்டு கடந்த ஏழு மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் .

பிறகு அந்த சிறுமி கடந்த வாரம் அவரிடமிருந்து தப்பி வந்து அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்ந்தார். அப்போது தனது கதையை அங்கு வந்த ராஜஸ்தான் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஷைலேந்திர பாண்ட்யாவிடம் விவரித்தார்.

அவர் அவரின் கணவர் வீட்டாரிடமிருந்து அவரை மீட்டு அங்கேயே தங்க ஏற்பாடு செய்துள்ளார் ,
இது பற்றி அந்த பெண் கூறியதாவது தன்னுடைய பக்கத்துக்கு வீட்டுக்கார பெண் லட்சுமி ததீச் என்பவர் தன்னை சுற்றுப்பயணம் கூட்டி செல்வதாக கூறி பாப்ரனா கிராமத்திற்கு கூட்டி வந்து தன்னை லால் என்பவரிடம் 2.70 லட்சத்திற்கு விற்று விட்டு ஓடி விட்டார். இது பற்றி என்னுடைய பெற்றோருக்கு போன் செய்து கூறிய போது அவர்களுக்கு தெரிந்தே தான் இது நடந்துள்ளது என தெரியவந்தது. அவர்கள் தன்னை கூட்டி செல்ல எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. இதனால் தான் சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தொடர்பு கொண்டு இங்கு பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறினார் .

பணத்திற்காக பெற்ற பெண்ணை விற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.