அயோத்தி கட்டட இடிப்பு வழக்கு தீர்ப்பில்… 10 முக்கிய விஷயங்கள்!

Published:

advani-uma-bharati
advani-uma-bharati

நேற்றையத் தீர்ப்பில் சி பி ஐ நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 10 முக்கியமான விஷயங்கள்:

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று (சம்பவம் நடந்த தினம்) பகல் 12 மணி வரை எல்லாம் இயல்பு நிலையில் இருந்தது. கரசேவை நடந்ததன் அடையாளமாக ஒவ்வொருவரையும் சரயூ நதியிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணும் நீரும் எடுத்துவருமாறு கரசேவகர்களை அசோக் சிங்கல் கேட்டுக் கொண்டார். அவர்கள் கட்டிடத்தை சேதப்படுத்தும் வேறெதனையும் கையில் எடுத்து வராமல் இருக்கும் நோக்கத்துடன் அவர் இப்படிச் சொன்னார்

சிங்கல் இப்படிச் சொன்னதும் கடுப்பான கூட்டத்தில் ஒரு பிரிவினர் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் மேலேறினர். சிங்கல் அவர்களைக் கீழிறங்குமாறு மீண்டும் கூறினார். ஆனால் அவர்கள் அவர் அங்கிருந்து கல்லெறியத் தொடங்கினர். அவரைத் தாக்க முற்பட்டனர்

அமைதியாகத் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த கரசேவகர்கள் கல்வீச்சில் காயமடைந்தனர். அப்படியிருக்க அவர்களுக்கும் கல்லெறிந்தவர்களுக்கும் ஒரே நோக்கம் இருந்தது என எப்படிச் சொல்ல முடியும்?

பெண்கள், முதியவர்கள், ஊடகம் ஆகியோருக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ். எஸ். வி.எச்.பி தொண்டர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்பது டிசம்பர் 6, 1992 அன்று சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராம் கதா குன்ச் மேடையில் அமர்ந்திருந்தார்கள் என்பதற்கோ, கொந்தளித்துப் போய் கட்டிடத்தைச் சேதப்படுத்தத் தொடங்கியிருந்த கரசேவகர்களின் ஒரு பகுதியினரின் அருகில் அசோக் சிங்கலும், விஜயராஜே சிந்தியாவும் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகள் ஏதுமில்லை.

திடீரென்று ஆவேசமடைந்து கட்டிடத்தைத் தகர்க்கத் தொடங்கிய கரசேவகர்களின் ஒரு பகுதியினரை அராஜக கும்பல் என்றுதான் கூற முடியும்

அசம்பாவிதம் நடக்கக் கூடும் என்ற 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 2 தேதியன்று உளவுத்துறை அளித்த அறிக்கையும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோதிகளும் அந்தக் கோயில் நகரில் நுழைந்திருக்கிறார்கள் என்ற 1992ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையும் விசாரிக்கப்படவில்லை

சிபிஐ யின் சாட்சியங்களின் கூற்றுக்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. பலர் சம்பவ இடத்திலேயே இருந்திருக்கவில்லை

டிசம்பர் 6 அன்று நடத்தப்பட வேண்டிய கரசேவை குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 49 பேரும் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடினார்கள் என்பதை சிபிஐ ஆல் நிரூபிக்க முடியவில்லை வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்களைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் யார் என்ன பேசினார்கள்,

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
advani-mmjoshi-uma-bharati
advani-mmjoshi-uma-bharati

எந்த முழக்கம் சமூகங்களிடையே விரோதத்தைத் தூண்டியிருக்கும் என்பதை சிபிஐ நிரூபிக்கவில்லை. நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்ட வீடியோ கேஸட்கள் எடிட் செய்யவும், சேதப்படுத்தவும் பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட சாட்சிகளே இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்

தகவல்களுக்கு நன்றி இன்றைய (அக்.1.2020) டைம்ஸ் ஆஃப் இந்தியா. அதன் இணைப்பு :

ttps://timesofindia.indiatimes.com/…/arti…/78419855.cms
இதில் ஏழாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் என் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

இத்துடன் சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்க ஒத்திகை நடந்ததாக ‘இதுவரை காணாத படங்கள்’ என்று நேற்றுத் தீர்ப்பிற்குப் பின் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்களையும் இணைத்து யோசிக்கும் போது சில கேள்விகள் பிறக்கின்றன

அந்தப் படங்களில் இருப்பவர்கள் யார்? கர சேவகர்களா, அல்லது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோதிகளா?

அந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன? அவை ஏன் சம்பவம் நடந்த காலத்திலோ, வழக்கு நடந்த போதோ வெளியிடப்படவில்லை.அல்லது சிபிஐயிடம் ஒப்படைக்கப்படவில்லை?

அவற்றை இப்போது வெளியிடுவதற்குப் பின் உள் நோக்கங்கள் உள்ளதா?

கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோதிகள்…

  • மாலன் நாராயணன்
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img