​2017ம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு

Published:

​17 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியர் ஒருவர் மீண்டும் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.​

உலக அழகியாக ஹரியானாவை சேர்ந்த மனுஷி ஷில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
மனுஷி ஷில்லார் என்ற பெண் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 1997ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இவர் டெல்லியில் உள்ள சென்.தாமஸ் பள்ளியில் படித்தவர். ஹாரியானா மாநிலம் சோனி பேடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவர். இவரது தாயும் தந்தையும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
மனுஷி ஷில்லார் கடந்த ஜூன் மாதம் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார். தற்போது உலக அழகியாக இவர்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் மீண்டும் உலக அழகியாக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000ல் இந்தியாவை சேர்ந்த ப்ரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்
ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img