ஆப்ரெஷன் ஆகி ஐசியூவில் இருந்த பெண்! வாயை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த வார்டுபாய்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
hospital 1 - 2026

ஐசியூவில் இருந்த பெண்ணிடம் வார்டு பாய் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு பெண் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூவில் வைக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் இரவில் நோயாளியுடன் யாரும் தங்க கூடாது என்று கூறி இருந்தனர்.

அதனால் அவரது கணவர் அவரை விட்டு விட்டு இரவு சென்று மறுநாள் காலை வந்துள்ளார். அந்த பெண் காலையில் வந்து தனது கணவனிடம் அழுதுகொண்டே தனக்கு நடந்த துயரத்தை எழுதி காட்டியுள்ளார்.

அதில் அன்று அவரது அறைக்கு வந்த வார்டு பாய் பெண்ணின் கை, கால்களை கட்டி விட்டு வாயை அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

அங்கு வந்த பெண் ஊழியரிடம் கூற முயன்றபோது அந்த வார்டு பாய் மிரட்டியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரது கணவர் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த வார்டு பாயை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.