கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
prakash
prakash

சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாததால் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது தொற்றுநோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் 40 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.