பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல்: 31 நாளில் ரூ.2.19 கோடி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

IMG 20190503 210930 - 2026பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் எண்ணப்பட்டதில் கடந்த 31 நாளில் சுமார் 2 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரத்து 605 ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.

IMG 20190503 210851 - 2026பழனி தண்டாயுதபாணி மலைக்கோயில் உண்டியல்கள் கடந்த 31 நாட்களில் நிரம்பியதால் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

அதில் ரொக்கம் 2 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரத்து 605 இருந்தது. இது தவிர தங்கம் 1180 கிராமும், வெள்ளி 16 ஆயிரத்து 940 கிராமும் கிடைத்தன.

மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 343 கரன்சிகளும் இருந்தன

IMG 20190503 210651 - 2026இவை தவிர பித்தளை வேல், கைக் கடிகாரம், பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள் இருந்தன. மேலும் ஏலக்காயும், நவதானியங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

உண்டியல் எண்ணும் பணியின்போது பழனிகோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.