சதுரகிரியில் செடி கொடியை வெட்டி மூலிகை நீர் என்று வீடியோ பதிவிட்டவர்களுக்கு நூதன தண்டனை!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
sathuragiri forest dept punishment
sathuragiri forest dept punishment

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து செடி கொடிகளை வெட்டி மூலிகை நீர் என கூறி அதை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இனி நாங்கள் வனத்திற்குள் நுழைய மாட்டோம் எனக் கூறி, அவர்களை தோப்பு கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர் வனத்துறையினர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்!

தற்போது இந்தக் கோயிலானது கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டு, மூடப்பட்டுள்ளது.

sathuragiri forest dept punishment
sathuragiri forest dept punishment

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதுரகிரி மலை காப்புக் காட்டில் அத்துமீறி நுழைந்து நீர்க் கொடிகளை வெட்டி நீர் அருந்தி அதை வீடியோவாக வெளியிட்ட விருதுநகர் மாவட்டம் தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், மற்றும் மதுரை மாட்டம் பேரையூரைச் சேர்ந்த நபர் என இருவரை வன உயிரின காப்பாளர் முகமது சபாப் அறிவுறுத்தலின்படி சாப்டூர் வனச்சரக சாப்டூர் வனத்துறையினர் கைது செய்து தலா ரூபாய் 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 10,000 போய் அபராதம் விதித்தனர்.

மேலும் வனத்திற்குள் அத்துமீறி நுழைய மாட்டோம் என தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கி, வனத்துறையினர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.