கொரோனா: தற்கொலையை நாடாதீர்கள்: ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

radhakrishnan J
J

கொரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

“மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார மையத்தின் கருத்துகளைக் கேட்டு கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். நாளொன்றுக்கு 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சென்னையில் நாளொன்றுக்கு 3,000 பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 9,000-10,000 ஆக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 26) வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம்.

முன்பே ஏன் பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை எனக் கேள்வியெழுப்புகின்றனர். ஆரம்பத்தில், கொரோனா பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். படிப்படியாகத்தான் அனுமதி அளித்தது. தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் 70% அரசுப் பரிசோதனை மையங்கள்.

எண்ணிக்கையை வைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழ்நாட்டின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். பட்டிதொட்டியெல்லாம் சென்று இரவு, பகலாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அறிகுறியற்ற தொற்றாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. சிகிச்சை அளிக்காததால் ஒருவர் உயிரிழப்பதைத் தடுக்க இதுதான் வழி.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

காய்ச்சல் முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களைத் தாங்களே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சென்னையில் காய்ச்சல் முகாம்களை நாளொன்றுக்கு 35 ஆயிரம் மக்கள் பயன்படுத்துகின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், இதுவரை 9,539 தெருக்களில் மட்டும்தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 7,421 தெருக்களில் 3-க்கு மேற்பட்டவர்களும், 812 தெருக்களில் 5-க்கும் மேற்பட்டவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் கொரோனா தொற்று மற்றவர்களுக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. சென்னையில் 1,979 குடிசைப் பகுதிகள் உள்ளன. கண்ணகி நகர், எழில் நகர், திடீர் நகரில் வெற்றிகரமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. பொதுமக்களின் ஒத்துழைப்பால் இங்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு எல்லோரும் முகக்கவசம் அணிகின்றனர்.

இது புதிதாக உருவான நோய். இது அதிகமான மக்களுக்கு வந்த பின்னர்தான் இறங்கும் என்பது பொது சுகாதாரத்துறையின் கருத்து. இதை நமக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் 100% முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள், முதியவர்களைப் பொத்திப் பாதுகாக்க வேண்டும். அதுதான் மருத்துவம் சாராத முறை. இதற்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

இந்திய மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், ஐ.சி.எம்.ஆர். என அனைத்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, நோய் வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான உணவு, அலோபதி மருத்துவம் வழங்கப்படுகிறது. ‘ரெம்டெசிவிர்’ வரை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கெனவே உள்ள மருந்துகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. 11 வகையான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுகின்றன.

கொரோனா தொற்று வந்தாலே மரணம் என்ற எண்ணத்திலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 56% மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1.28% தான் இறப்பு விகிதம். ஒருவர் இறந்தாலும் இறப்புதான். அதனை நியாயப்படுத்தவில்லை.

ஆனால், தொற்று வந்தவுடன் தற்கொலை செய்வது, ஓடிச்செல்வது கூடாது. தொற்று வந்தவர்களை வசிக்கும் பகுதிகளில் புறக்கணிக்கக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலேயே இது வேகமாகப் பரவுகிறது, மற்றபடி, சளி, காய்ச்சல் போன்று இதுவும் சாதாரணமானதுதான். இதர நோய்களுடன் இது வித்தியாசமானது அல்ல.

தடுப்பு மருந்து, சிகிச்சை மருந்துகள் உலக அளவில் நிச்சயம் கண்டுபிடிக்கப்படும். பிளாஸ்மா சிகிச்சைக்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவத்திற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இறப்பைத் தவிர்ப்பதுதான் முதன்மையான நோக்கம். இறப்புகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. குணமடைபவர்கள் எப்படி குணமடைகின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கும் மன அழுத்தம் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. யாராக இருந்தாலும் 104 என்ற தொலைபேசி எண்ணை அணுகி ஆலோசனை பெறலாம். யாரை வேண்டுமானாலும் பரிசோதனை செய்வது சிறந்ததல்ல. நோய்த் தடுப்புப் பகுதியில் உள்ளவர்களைப் பரிசோதிக்கிறோம். ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசோதிக்கிறோம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories