மகன் சோறு போடலைன்னு ரோட்டுக்கு வந்த அப்பா! எதிர்த்து மரத்துல ஏறின மகன்!

Published:

husnabad father and son duo protest against each other over food
husnabad father and son duo protest against each other over food

நேற்று சாலைக்கு வந்த தந்தை. ..
இன்று மரத்தின் மேலேறிய மகன்…

சோறு போடவில்லை என்று ஒரு தந்தை போராட்டத்தில் ஈடுபட்டார். அனாவசியமாக தன் பெயரைக் கெடுக்கிறார் என்று மகன் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் அளித்து அனுப்பினர் ஹுஸ்னாபாத் போலீசார்.

தந்தை-மகன் இருவரும் சாலையில் இறங்கி போராடியதை விந்தையாகப் பார்த்தனர் உள்ளூர் மக்கள். பசிக்கொடுமையால் அவதிப்படுகிறேன் என்று தந்தை சொல்ல… அதெல்லாம் ஒன்றுமில்லை அனாவசியமாக என் பெயரைக் கெடுக்கிறார் என்று மகன் சொன்னார். சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தந்தையின் செயலைக் கண்டித்து மரத்தின் மேலேறி உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் மகன்.

இந்த சம்பவம் சித்திப்பேட்ட மாவட்டம் ஹுஸ்மாபாதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹுஸ்மாபாத் நகரைச் சேர்ந்த கொத்தகொண்ட சுவாமி என்பவருக்கு இரு மகன்கள். “இருவரையும் வளர்த்து நல்ல நிலையில் இருத்தினேன். ஆனாலும் ஒரு வாய் சோறு போடுவதில்லை” என்று தந்தை ஞாயிறுன்று சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறார் என்று பெரிய மகன் சந்தோஷ் தன் வீட்டு வாயிலில் இருந்த மரத்தின் மேலே ஏறி அமர்ந்தார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

விவரமறிந்த எஸ்ஐ ஸ்ரீதர் அவர்களை சமாதானப்படுத்தி சந்தோஷைக் கீழே இறக்கினார். சுவாமி, அவருடைய மகன்கள் சந்தோஷ், சுதாகர் மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து கவுன்சிலிங் அளித்து அனுப்பி வைத்தனர் போலீசார்.

தம் சொத்து பிரச்சனைகளையும் பிறவற்றையும் தாமே சமரசமாக தீர்த்துக் கொள்வோம் என்று அவர்கள் அங்கீகரித்ததாக எஸ்ஐ தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img