fire
fire

தில்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 57 வயதான ஒரு தொழிலதிபர் எந்நேரமும் சமூக ஊடகத்தில் பல பேரோடு அரட்டையடித்து வந்தார்.

அப்போது ஒரு மோசடி கும்பலை சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக அறிமுகமானார். அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அந்த தொழிலதிபர் அந்த பெண்ணோடு சமூக வலைதளத்தில் அரட்டையடித்து வந்தார்.

அதன் பிறகு அந்த பெண் அவரை ஒரு ஹோட்டலில் சந்திக்க அழைத்துள்ளார்.
அதனால் அந்த தொழிலதிபர் புது உடையும் செண்டும் போட்டுகொண்டு ஆசை கனவுகளுடன் அவருடன் தனிமை அனுபவிக்க அந்த ஹோட்டலுக்கு போயுள்ளார்.

அப்போது அந்த பெண் அங்கே அவருக்காக காத்திருந்தார். பின்னர் அவர் அந்த தொழிலதிபருக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர் பானம் கொடுத்தார்.

அதை வாங்கி குடித்ததும் அவர் மயங்கி கீழு விழுந்தார். அதன் பின்னர் அந்த பெண்ணும் அவருடைய கூட்டாளிகளும் அவரை பல கோணங்களில் நிர்வாணமாக அந்த பெண்ணுடன் இருப்பது போல் படமெடுத்தனர்.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

பின்னர் மயக்கம் தெளிந்த அந்த தொழிலதிபர் தான் நிர்வாணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர் அந்த பெண் அவரிடம் இந்த நிர்வாண வீடியோ வெளிவராமலிருக்க உடனே 12லட்சம் பணம் கேட்டுள்ளார். அதை தரக் கூறி மிரட்டியுள்ளார். ஆனால் அந்த தொழிலதிபர் தன்னிடமிருந்த 2 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

பின்னர் வீட்டுக்கு வந்து அவர் அவமானம் தாங்காமல் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending