ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர் தமீசுதீன்! வைரல் வீடியோ!

Published:

chapathi
chapathi

இது கொரோனா காலம் என்பதால் அடுத்தவர் விடும் மூச்சுக்காற்றும், தும்மலும் பிறருக்கு தொற்றை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் மாஸ்க் அணியும் கட்டாயம் உலகமெங்கும் இருக்கிறது.

இப்போதெல்லாம் பொதுவெளியில் ஒருவர் கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டாலோ, தும்மினாலோ, இருமினாலோ தெறித்து ஓடுகின்றார்கள். அந்த அளவுக்கு பீதியில் எல்லோரும் வாழ்ந்து வரும் போது சாப்பிடும் பொருளில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரரின் செயல் வீடியோவாக வெளியாகி பலரையும் பதறச் செய்திருக்கிறது.

பானிபூரியில் வைத்து கொடுக்கப்படும் தண்ணீரில் சிறுநீர் பெய்து, அதை ஊற்றி கொடுத்த வியாபாரியின் செயல் வெளியாகி நாடெங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பானிபூரி கடையை பார்த்தாலே, அந்த வியாபாரியின் வீடியோ நினைவுக்கு வந்து பலரும் தெறித்து ஓடுகின்றனர். தற்போது சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரரின் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பெரும்பாலானோர் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அஞ்சுவது இதன் காரணமாகத்தான். இப்படி எல்லாம் செய்வார்கள் என்று தான் பெரும்பாலானோர் ஹோட்டல் உணவை தவிர்த்து விடுகின்றனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

மனசாட்சி உள்ளவர்கள் இப்படி செய்வதில்லை. இப்படிப்பட்ட மனசாட்சி அற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் ஒரு சைக்கோ மனநிலைதான்.

அப்படித்தான் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் அந்த சமையல்காரர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அடுத்தவர் உணவில் எச்சில் துப்பி சமைப்பது தவறு. அதுவும் இந்த கொரோனா காலத்தில் இப்படி செய்வதெல்லாம் நியாயமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வர, போலீசாருக்கும் புகார்கள் பறக்க, இந்த வீடியோ தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் உள்ள சமையல்காரர் தான் இப்படி சமைத்தது தெரியவந்தது. அவர் பெயர் தமீசுதீன் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மீண்டும் அதே தவறை எங்கும் செய்ய செய்யக்கூடாது என்று போலீசார் அவருக்கு அறிவித்திருக்கின்றனர். ஆனால் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வாரா என்பது கேள்விக்குறிதான்.

Related articles

Recent articles

spot_img