தமிழகத்தில் இருந்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் உள்பட ஆறு பேருக்கு பத்ம விருதுகள்!

இந்தியா சற்றுமுன் தமிழகம்

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப் பட்டுள்ளன.

பத்மவிபூஷண் விருதுக்கு 3 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளையராஜா பட்டியலில் முதல் பெயராக இடம்பெற்றுள்ளார். மகாராஷ்டிரத்தை சேர்ந்த குலாம் முஸ்தபா கான், கேரளத்தைச் சேர்ந்த இலக்கியவாதியும் கல்வியாளருமான ஸ்ரீபரமேஸ்வரன் ஆகியோர் பத்ம விபூஷணுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் பரமேஸ்வரன், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் தலைவர் என்பதால், அவரும் தமிழகத் தொடர்பில் உள்ளவர்தான்!

தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து, யோகா பிரிவில் வி.நானம்மாள், அறிவியல் மற்றும் பொறியியல் கண்டு பிடிப்புகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் ராஜகோபாலன் வாசுதேவன், வனவிலங்கு பாதுகாப்புக்காக ரோமுலஸ் விட்டேகர் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.