WC 2023: நான்காம் இடத்துக்கான போட்டியில் நியூஸி. தேறுமா?

Published:

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
36ஆம் நாள் – இலங்கை vs நியூசிலாந்து
பெங்களூரு – 08.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இலங்கை அணியை (46.4 ஓவர்களில் 171, குசல் பெரேரா 51, மஹீஷ் தீக்ஷணா 38, போல்ட் 3/37, ஃபெர்கூசன் 2/32, சாண்ட்னர் 2/22, ரவீந்திரா 2/21) நியூசிலாந்து அணி (23.2 ஓவர்களில் 172/5, டேவன் கான்வே 45, ரச்சின் ரவீந்திரா 42, டேரில் மிட்சல் 43, கிளன் பிலிப்ஸ் 17*, ஆஞ்சலோ மேத்யூஸ் 2/29) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆகவே முதலில் மட்டையாட வந்த இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 74 ரன்கள் அடித்தது. அதில் குசல் பெரேரா மட்டும் 51 ரன் அடித்தார். பதுன் நிசாங்கா (2 ரன்), குசல் மெண்டிஸ் (6 ரன்), சமரவிக்ரமா (1 ரன்), சரித் அசலங்கா (8 ரன்), குசல் பெரேரா ஆகியோர் முதல் பத்து ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். ஆஞ்சலோ மேத்யூஸ் (16 ரன்) மற்றும் தனஞ்சயா டி சில்வா (19 ரன்) இருவரும் இலங்கை அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு உயர்த்த முயன்றனர். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. மஹீஷ் தீக்ஷணா மட்டும் 91 பந்துகள் விளையாடி 38 ரன்கள் அடித்தார். ரன் அதிகம் சேர்க்காமல் இலங்கை அணி 46.4 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தது. இறுதியில் 171 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

          172 ரன் என்ற இலக்கோடு ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர்கள் டேவன் கான்வே (45 ரன்), ரச்சின் ரவீந்திரா (42 ரன்) அடித்தனர். அதன் பின்னர் கேன் வில்லியம்சன் 14 ரன் களில் மேத்யூச் பந்தில் கிளீன் போல்டானார். மார்க் சாப்மேன் 7 ரன்னில் ‘ரன் அவுட்’ ஆனார். 15 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கட் இழப்பிற்கு 95 ரன் எடுத்திருந்தது. ஆனால் நியூசிலாந்து அணியோ இரண்டு விக்கட் இழப்பிற்கு 103 ரன் எடுத்திருந்தது. இறுதியில் விக்கட்டுகள் சில விழுந்தபோதும் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 172/5 எடுத்து இலங்கை அணியை 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் 3 விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

          இன்றைய வெற்றியோடு நியூசிலாந்து அணி 10 புள்ளிகள் மற்றும் 0.743 என்ற ரன்ரேட்டுடன் நாலாவது இடத்தில் உள்ளது. நாளை அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்க ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. வெற்றி வாய்ப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிகம். சனிக்கிழமை இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகளைப் பொறுத்து நியூசிலாந்து அரையிறுதிக்குச் செல்லுமா இல்லையா என முடிவாகும்.  

Related articles

Recent articles

spot_img