நாடு முழுதும் தே.ஜ.கூட்டணி ஆட்சி; கனவை நனவாக்க சந்திரபாபுவுடன் சமரசம் மேற்கொள்ளும் அமித் ஷா

புது தில்லி:

நாடு முழுதும் தே.ஜ.கூட்டணி ஆட்சி இருக்க வேண்டும் என்ற பாஜக., தலைவர் அமித் ஷா தனது ஆசையை நிறைவேற்ற, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாகக் கூறி வரும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சமரசப் பேச்சை தொடங்கவுள்ளார்.

இதை அடுத்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. அண்மையில் மத்திய பட்ஜெட்டில், ஆந்திர மாநில அரசுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்ற மனத்தாங்கல் சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்தது. மேலும், ஆந்திரத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாகவும் அவர் தனது திருப்தியற்ற நிலையைத் தெரிவித்து வந்தார். இதனால், தாம் கூட்டணியில் இருந்து விலகப் போவதாகக் கூறி வந்தார். இருப்பினும், மாநில நலன் கருதி தனது முடிவை ஒத்திப் போடுவதாகக் கூறினார். இந்நிலையில் ஆந்திரா மறுசீரமைப்பு சட்டம், ஆந்திர மாநில அரசுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு முன் வைத்துள்ளார்.

இதை அடுத்து, சந்திரபாபு நாயுடுவின் அதிருப்தி மன நிலையை சரி செய்யும் விதமாகவும், பேச்சுவார்த்தை நடத்தவும் பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று சந்திரபாபு நாயுடு சார்பில் பிரதிநிதிகள் மார்ச் 5-ம் தேதி அமித்ஷாவை சந்திக்கின்றனர். அப்போது நாயுடுவை சமரசம் செய்யவும், தேஜ., கூட்டணியில் இருந்து வெளியேறும் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யச் சொல்லவும் அமித்ஷா முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Entertainment News

Popular Categories