December 8, 2025, 4:13 AM
22.9 C
Chennai

IPL 2024: அதிரடி காட்டிய தில்லி அணி

ipl 2024 - 2025

இருபத்தியிரண்டாம் நாள்
ஐபிஎல் 2024 – 12.04.2024 – மும்பை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்         

லக்னோ அணியை (167/7, ஆயுஷ் பதோனி 55*, கே.எல். ராகுல் 39, அர்ஷத் கான் 20, டி காக் பிருத்வி ஷா 3219, குல்தீப் யாதவ் 3/20, கலீல் அகமது 2/41) டெல்லி அணி (170/4, ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் 55, ரிஷப் பந்த் 41, ரவி பிஷ்னோய் 2/25) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோவில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்ணோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான குவிண்டன் டி காக் (13 பந்துகளில் 19 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான கே.எல். ராகுல் 9.3 ஓவர் வரை விளையாடி 39 ரன்கள் (22 பந்துகள் 5 ஃபோர், 1 சிக்சர்) சேர்த்தார். இவரைத் தவிர படிக்கல் (3 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (8 ரன்), நிக்கோலஸ் பூரன் (பூஜ்யம், கோல்டன் டக்), இம்பேக்ட் பிளேயராக வந்த தீபக் ஹூடா (10 ரன்), க்ருணால் பாண்ட்யா (3 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

ஆயினும் ஆயுஷ் பதோனி (35 பந்துகளில் 55 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அர்ஷத் கான் (16 பந்துகளில் 20 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 167 ரன் எடுத்தது. டெல்லி அணியின் குல்தீப் யாதவ் 20 ரன் கொடுத்து 35 விக்கட் எடுத்தார். 

          168 ரன் என்ற இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (8 ரன்) 3.4ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஏழாவது ஓவரை ஆடினார். 22 பந்துகளில் 32 ரன் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தார்.

22 வயதான் ஆஸ்திரேலிய வீரர், இன்று ஐபிஎல்லில் முதல் ஆட்டம் ஆடுகின்ற ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் இன்று சிறப்பாக ஆடினார். அவர் 35 பந்துகளில், 4 ஃபோர், 2 சிக்சர்களுடன் 55 ரன் அடித்தார். அணித்தலைவர் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

மீதமுள்ள பனிகளைச் செவ்வனச் செய்து ஸ்டப்ஸும் (15 ரன்) ஷாய் ஹோப்பும் (11 ரன்) 18.1 ஓவரில் 170 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

          மும்பை அணியின் குல்தீப் யாதவ் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

12.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்54180.871
கொல்கொத்தா43161.528
சென்னை53260.666
லக்னோ53260.436
ஹைதராபாத்53260.344
குஜராத்6336-0.637
மும்பை52340.073
பஞ்சாப்5234-0.196
டெல்லி6244-1.124
பெங்களூரு6152-1.124

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories