சிங்கப்பூரில் திக்கித் திணறிய ராகுல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்தியா தமிழகம்

rahul gandhi singapore - 2026

சிங்கப்பூரில் நடந்த கலந்துரையாடலில் பேராசிரியரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திக்கித் திணறினார். இது குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

சிங்கப்பூரில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கு ஒன்றில் பேராசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திணறினார். சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தின்போது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, ”ஆசியா ரீபார்ன்” என்ற பொருளாதாரம் குறித்த புத்தகத்தை எழுதிய பி.கே.பாசு என்ற பேராசிரியர் (PK Basu), கேள்வி ஒன்றை எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இந்தியாவில் தனிமனித வருமானம் மிகவும் குறைவாக இருந்தது என்றும், தற்போது தனிமனித வருமானம் வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் குறிப்பிட்டு, இது எப்படி என கேள்வி கேட்டார்.

இதில் குழம்பிப் போன ராகுல், கேள்வி புரியவில்லை என்று கூறிவிட்டு, பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தார். மறுபடியும் கேள்வி கேட்ட பின்னர், தனிமனித வருமான வளர்ச்சி பிரதமர் மோடியால் ஏற்பட்டிருக்காது என்று மறுத்தார்.

இருப்பினும், சிங்கப்பூரில் அப்படி ஒன்றும் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பையோ, விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை என்றும், இங்குள்ள அரசியல் இந்தியாவின் அரசியலைச் சார்ந்து இல்லை என்றும் சிங்கப்பூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.