rahulgandhi sonia - 2026

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை மோடி அரசு ஒழித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் வெற்றி நமது தேசத்தின் வெற்றி என்றார். 40 ஆண்டுகளுக்கு முன் சிக்மங்களூரில் இந்திரா பெற்ற வெற்றி இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. சவாலான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல்காந்திக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட அழைப்பு விடுத்த அவர், ராகுல் காந்தியுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை மோடி அரசு ஒழித்து வருகிறது என சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சவாலான நேரத்தில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கர்நாடக தேர்தலில் நாம் செயல்படும் விதம் மாற்று அரசியல் திசைக்கு அழைத்துசெல்லும் என்று பேசினார். சோனியாகாந்தி.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

மேலும், 2019 ல் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். 2019 ல் நாட்டை காங்கிரஸ் மீட்டெடுக்கும். இதற்காக இப்போதே திட்டமிட வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அரசியலில் நுழைய நான் விரும்பியதில்லை. ஆனால் சூழ்நிலை என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. நான் இரண்டு தலைமுறையாக காங்கிரஸ் தலைவராக இருந்தது பெரும் பாக்கியம்.

ஐமு., கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை மோடி அரசு வலுவிழக்க செய்து விட்டது. ஐ.மு.,கூட்டணி திட்டங்களை மோடி மதிக்கவில்லை. மோடி அரசு எதிர்க் கட்சியினரை அழித்து வருகிறது. மீடியாக்களை நசுக்க நினைக்கிறது. மோடி வாக்குறுதிகள் மட்டும் கொடுப்பவராகவே உள்ளார். மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தது. புதிய அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பெரும் சவால்களை எதிர் கொண்டுள்ளோம். ஊழலற்ற, பழிவாங்கும் அரசியலை ஒழித்து மேக் இன் இந்தியா உருவாக்குவோம். இதற்கு கட்சி தலைவர் ராகுல் தலைமையில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று பேசினார் சோனியா காந்தி.
ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending