sridevi 3 - 2026


நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிய மனு தள்ளுபடி. #Actress_SriDevi #DeathCase #Investigation #petition #Rejected


புது தில்லி:  ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அதனை விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குடும்ப திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபை சென்ற நடிகை ஸ்ரீதேவி, அங்குள்ள ஹோட்டல் குளியலறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து விசாரணை செய்த துபை போலீஸார், அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும், திடீர் மாரடைப்பு என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி, சுனில் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, துபை போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தேகப் படும் அம்சங்கள் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக் காட்டி, எனவே இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending