எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை

Published:

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இன்று அதிகாலை குப்வாரா மாவட்டத்தின் தாங்தார் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்டறிந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஊடுருவ முயன்றபடி, தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இருப்பினும், நள்ளிரவு நேரத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ராணுவத்தினர் தாங்தார் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img