ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

Published:

cricket eng ind odi - 2026

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து சென்று விளையாடி வரும் இந்திய அணி, முதல் போட்டியில் வென்றது. பின்னர் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. இந் நிலையில், மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. எனவே இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகக் கருதப் பட்டது. இதில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால், தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணியிடம் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி, இந்தப் போட்டித் தொடரை வெல்ல கூடுதல் கவனம் செலுத்தியது.

இந்திய அணி சேஸிங்கில் சிறப்பாக செயல்படும் என்பதால், டாஸ் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா ஏமாற்றம் அளித்ததால், அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணித் தரப்பில் அதிக பட்சமாக விராட் கோலி 71, ஷிகர் தவான் 44, தோனி 42 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்தது

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் வின்ஸ், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தைக் கொடுக்க அணி வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த ஜோ ரூட், மோர்கன் ஆகியோர் நிலைத்து நின்று ரன் சேர்க்க, 44.3 ஓவரில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 100 ரன், மோர்கன் 88 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img