நான் எதுகுறித்து பேசுவது?…. மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி

இந்தியா சற்றுமுன்

03 Auguest 01 Modi - 2026சுதந்திர தின உரையில் எது குறித்தெல்லாம் பேசலாம் என பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் யோசனை கேட்டுள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தாம் உரை நிகழ்த்த உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த உரை தொடர்பான தங்களது எண்ணங்கள் மற்றும் யோசனைகளை, நரேந்திர மோடி செயலியில் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கருத்துக் களத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

www.mygov.in இணையதளம் வாயிலாகவும் யோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம் என மோடி தெரிவித்துள்ளார். பயனுள்ள தகவல்களை தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். நாட்டின் 72-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்தாண்டு சுதந்திர தினத்தின் போது பிரதமர் மோடி மிக குறுகிய உரை நிகழ்த்தினார். அதாவது ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.