பெண்களை வசியம் செய்தாராம்…கிளி ஜோசியக்காரர் நடுரோட்டில் வெட்டிக் கொலை!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
parrot astrology man murdered - 2026

திருப்பூர் குமரன் சாலையில் கிளி ஜோசியராக இருந்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தவர் ரமேஷ் என்னும் குமார். இவர் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்திருந்த மர்ம நபர் ஒருவர் ரமேஷை பயங்கர ஆயுதம் கொண்டு தாக்கி கீழே தள்ளினார். இவரது தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த ரமேஷை பலமுறை அரிவாளால் வெட்டினார் அந்த நபர்.

பின்னர் தாம் கொண்டு வந்திருந்த ஒரு நோட்டீஸையும் அங்கிருந்தவர்களிடம் விநியோகம் செய்தார். அந்த நோட்டீஸில், கிளி ஜோசியர் ரமேஷ், பெண்களை வசியம் செய்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார். ரமேஷின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாலும், தமக்கு அது பிடிக்காததாலும், கிளிஜோசியர் ரமேஷை கொலை செய்ததாகக் கூறியபடி அவர் சென்றார்.

பட்டப்பகலில் நடுரோட்டில் திடீரென நடைபெற்ற இந்தச் சம்பத்தால், சாலையில் நடந்து சென்றோர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்தக் கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.