ஊரை விட்டு ஒதுக்கியதால்… சடலத்தை சைக்கிளில் எடுத்துச் சென்று புதைத்த சோகம்!

Published:

body incycle - 2026

மனைவியின் தங்கை சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்று தனியாக புதைத்த கணவனின் சோக பின்னணி இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சாதி மாறி திருமணம் செய்ததாக ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலத்தை ஒருவர் சைக்கிளில் கொண்டு சென்றுள்ள அவலம் நடந்துள்ளது.

ஒடிசாவின் கிருஷ்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்ருபன்கா. இவர் மனைவி மற்றும் அவரின் சகோதரியுடன் வசித்து வந்தார். சாதி மாறி திருமணம் செய்ததாக கூறி இவர்களை கிராமத்தினர் ஊரை விட்டு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் மனைவியின் சகோதரிக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர் என்பதால் அப்பெண்ணின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவி தடுக்கப்பட்டுள்ளது.

அதோடு இறுதிச்சடங்கிலும் உதவ யாரும் முன்வரவில்லை. இதனால் தனது மனைவியின் சகோதரி உடலை சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற சத்ருபன்கா, தனியாகவே இறுதிச்சடங்கையும் செய்து முடித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img