சபரிமலை தீர்ப்பு விவகாரம்… மாறி ஒலிக்கும் அரசின் குரல்… என்னப்பா டகால்டி வேலை இது?!

Published:

sabarimalai adi month - 2026

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தேவஸம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த நிலையில், அவ்வாறு தேவசம் போர்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தால், அதை அரசு தடுக்காது என்று கூறியுள்ளார் கேரள தேவசம் போர்டு அமைச்சர்.

தீர்ப்பை வரவேற்கிறோம், ஆனால் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வதையும் வரவேற்கிறோம் என்று கூறி மக்களின் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்துள்ளனர் கேரள கம்யுனிச அரசியல்வாதிகள்!

இதனிடையே, நம்பிக்கை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை என்று கூறினார் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்!

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவோம் என்று கூறி வந்தவர்கள், திடீரென மறு சீராய்வு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடியது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு!

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

அதே நேரம், இந்தத் தீர்ப்பை வரவேற்ற தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ”தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது. அது சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அரசின் நிலைப்பாட்டை போர்டு மீது திணிக்கப் போவதில்லை” என்று கூறி தங்களின் இரட்டை அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

அதுபோல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தேவசம் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img