சபரிமலையில் 144 தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்!

Published:

 

சபரிமலை விவகாரத்தில் 144 தடை உத்தரவை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

சபரிமலை விவகாரத்தில், 144 உத்தரவை நீக்கக் கோரி சபரிமலைக்கு சென்ற கேரள எதிர்க் கட்சி தலைவர் ரமேஷ் செனிதலா உள்ளிட்ட எதிர்க் கட்சியினரை நிலக்கல் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நிலக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது கேரள அரசு. சபரிமலைக்கு வருபவர்கள், தனியாக வரமாட்டார்கள் என்பதும், குழுவாக, வெவ்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. இந்நிலையில், 144 தடை உத்தரவு போட்டு, பக்தர்களை பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

 

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img