மலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல்! இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு!

மலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள் கோயிலுக்கு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் பின்னர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்தச் சம்பவம் மலேசியாவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் ஹிந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மலேசிய வாழ் இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையையும் அநீதியையும் கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில்,  மலேசிய தூதரகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டமும், பிரதமர் மோடிக்கு புகார் மனுவும் அனுப்பும் போராட்டமும் நடத்தப்படுகிறது.

இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்த போது,

மலேசிய நாட்டில் சீ பீல்டு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டதற்கும், மலேசிய இந்து தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் சென்னை மலேசிய துணை தூதரகம் முன் இ.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம் / கோரிக்கை மனு சமர்பித்தல் போராட்டம் நவ.28 புதன் கிழமை நாளை மதியம் 2.30 மணி அளவில் நடைபெறும். இதற்கு இந்து உணர்வாளர்கள் வந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.. என்றார்.

மேலும் இது குறித்து கூறிய அவர், மலேசிய நாட்டில், கோலாலம்பூரில் நேற்று இரவு 26.11.2018 சீ பீல்டு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயிலில் (Seafield Sri Maha Mariamman Temple) சுமார் 200 மலேசிய இசுலாமிய பயங்கரவாதிகள் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்து கொடூர தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டுள்ளது, அங்குள்ள தமிழர்கள் ஒன்று கூடி அவலக்குரல் எழுப்பியுள்ளனர்,

அதை பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் கொடுந் தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். அங்கு கூடி கோயிலை பாதுகாக்க முயற்சித்த மலேசிய இந்து தமிழ் இணைஞர்கள் பலருக்கும் மண்டை உடைந்து இரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளின் கழுத்தை அறுக்க முயற்சி செய்து காயம் ஏற்பட்டுள்ளது.
இக்கொடூர சம்பவம் நிகழும் போது தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த மலேசிய காவல் துறையினரும் வன்முறைச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுக்க எந்த முயற்சியும் மலேசிய காவல்துறை மேற்கொள்ளாமல் இசுலாமிய வன்முறையாளர்களுக்கு துணை போய் உள்ளனர். இது சம்பந்தமான படக்காட்சிகள் நேரலையாக உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு பரவி வருகிறது.

இந்தக் காட்சிகள் தமிழகத்திலும், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இந்துத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சமீபகாலமாக மலேசியாவில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மலேசிய மண்ணின் மைந்தர்களாகிய இந்து தமிழர்களின் மீது மலாய் இசுலாமிய மத வெறியர்களின் வன்முறைத்தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மலாய் இந்து தமிழர்களின் கல்வி, தொழில் வேலைவாய்ப்புக்களை அடாவடியாக தட்டிப்பரித்து வருகின்றனர். தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள், வீடுகள், சொத்துக்கள், ஆக்கிரமிக்கப் படுகின்றன. கல்வி நிலையங்கள், கோயில்கள், ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மலேசிய அரசாங்கம், தங்கள் சொந்த குடிமக்களாகிய மலாய் இந்து தமிழர்களை பாதுகாக்க தவறி வருகிறது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இசுலாமிய மதவெறி போதகர் டாக்டர்.ஜாஹிர் நாயக் அவர்களுக்கும், அவரது மதவெறிப்பிரச்சார நடவடிக்கைகளுக்கும், மலேசிய அரசு அடைக்கலம் கொடுத்து ஆதரித்து வருகிறது. சர்வதேச இசுலாமிய பயங்கரவாத அமைப்பான ISIS நடவடிக்கைகளும் மலேசிய மண்ணில் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தான், வங்கதேச இசுலாமிய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளும், அரபுநாடுகளின் வஹாபிய இசுலாமிய பழமைவாத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலிருந்து செயல்படும் இசுலாமிய மத அடிப்படை வாத அமைப்புக்களின் செயல்பாடுகளும், மலேசிய மண்ணில் உள்ளது.

இவர்கள் அனைவரும் மலேசிய இந்து தமிழர்களுக்கு எதிராக அராஜக செயல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

மலேசிய அரசாங்கம் உடனடியாக இது விஷயத்தில் நடவடிக்கை எடுத்து மலேசிய குடிமக்களாகிய இந்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சீ பீல்டு ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் மீது தாக்குதல் நடத்திய இசுலாமிய பயங்கர வாதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இது சம்மந்தமாக இந்திய அரசு, குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மலேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசிய தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். மலேசிய இந்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…. என்று கூறியுள்ள அர்ஜுன் சம்பத், தாம் பிரதமர் வலைதளத்தில் இது குறித்து புகார் பதிவு செய்திருப்பதாகவும், ஹிந்துக்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்பை பிரதமருக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தாக்குதல் நடத்தப் பட்ட பின் ஹிந்துக்கள் கதறிய வீடியோக்கள்…