சபரிமலையில் மீண்டும் பரபரப்பு! நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்!

Published:

sabarimalai without people3 - 2026

சபரிமலையில் நள்ளிரவில் மேலும் இரண்டு பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்காக வந்திருந்தனர் அவர்களால் மீண்டும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரோஷ்மா நிஷாந்த், ஷாலினி ஆகிய 2 இளம்பெண்களும் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பம்பை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவர்களை மறித்து சபரிமலை பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்! அவர்கள் இருவரையும் பெருமளவிலான பக்தர்கள் சூழ்ந்து கொண்டு மேலே செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து அந்த பெண்கள் இருவரும் போலீசாரால் பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்

முன்னதாக அவர்கள் இருவரும் தாங்கள் சபரிமலையை ஐயனை தரிசிக்காமல் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று அடம்பிடித்தனர். தாங்கள் 41 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை காண வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்

9 பேர் கொண்ட குழுவினர் உடன் அவர்கள் இருவரும் வந்ததாக தெரிகிறது. கோயிலுக்குச் செல்லும் வழியில் பம்பை அடிவாரத்தில் இருந்து சற்று தொலைவில் அவர்கள் பக்தர்கள் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அதிகாலையில் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது!

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img