அப்படி என்ன பேசினார் ஸ்மிருதி இரானி?

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சின் தமிழாக்கச் சுருக்கம்! 

இடம்: பாராளுமன்ற மக்களவை, தில்லி
தேதி: 24-பிப்ரவரி-2016
பின்னணி: ஹைதராபாத் மத்திய பல்கலைகழக வளாகத்தில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ‘இந்திய எதிர்ப்பு’ கோஷங்கள் செய்ததற்காக ‘தேச நிந்தனை’ வழக்கில் மாணவர்கள் சிறை பிடிக்கப்பட்டதை கண்டித்தும் பஹுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகாதா போஸ் மற்றும் இந்திரா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜ்யோதிராதித்ய சிந்தியா மனித வளத்துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானி ‘மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’, ‘சகிப்பு தன்மை குறைந்துவிட்டது’ மற்றும் இந்த அரசாங்கம் சிறுபான்மையினரை ஒதுக்குவதாகவும் வாதாடினர். அதற்கு ஸ்ம்ருதி இரானி பதிலளித்து பேசியதின் தமிழ் மொழிபெயர்ப்பு

சபாநாயகர்: திருமதி. சுமித்ரா மகாஜன்

பி.கு: ஆங்கிலம் கலந்த தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. மேடம் என்ற வார்த்தை சபா நாயகரை குறிக்கும்.

“நான்கரை ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான், இப்பொழுது பல பிரச்சனைகளை விவாதிக்க இருக்கிறேன். 20 மாதங்களாக அமைச்சராக இருக்கும் நான், இந்த நாட்டிற்க்கும், பதவிக்கும், மக்களுக்கும் எந்த விதமான பாரபட்சமின்றி உழைத்து வருகிறேன். இந்த பாராளுமன்றத்தில் என் நேர்மையை கேள்வி கேட்டும் என்னை தாக்கி பேசும் அனைவருக்கும் கீழ் வரும் உண்மைகளை தெரியபடுத்துகிறேன்.”

” என் அமைச்சகம் (மனித வள மேம்பாட்டு அமைச்சகம்) பற்றி – அரசுக்கு சாதகமான விஷயங்களுக்கு மட்டும் பதில் அளிக்கிறது என்ற எண்ணம் பரப்பப்படுகிறது. நான் அவர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். 1-5-2015 முதல் 23-2-2016 வரை பொது மக்களிடமிருந்து 66,230 புகார்கள் வந்துள்ளன. இந்த காலகட்டத்தில் 61,982 பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் பதிலும் அளிக்கப்பட்டிருக்கிறது.” (கை தட்டல்கள்)

” பிரச்சனைகளை தீர்த்ததில் அவர்களிடம் ஒரு போதும் ‘என்ன ஜாதி? , என்ன இனம்? யாருக்கு வாக்களித்தீர்கள்’ என்று கேட்டதில்லை. ஏனெனில், அவர்கள் எழுப்பும் கோரிக்கைகளில் நியாயத்தை மட்டுமே பார்த்திருக்கிறேனே தவிர வேற எந்த ஒரு உள்நோக்கத்தினோடு பார்த்ததில்லை. சிலர் சத்தம் எழுப்பவதற்கேன்றே ‘இது RSS ஆல் கட்டுபடுதப்படும் கட்சி, ஆகையால் சிறுபான்மையினரை பயத்தில் வைத்திருக்கின்றனர்’ என கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் – 12-பிப்ரவரி-2015 அன்று ‘எனக்கு scholarship(உதவித்தொகை) கிடைக்கவில்லை’ என ஒரு மாணவன் எனக்கு கடிதம் எழுதுகிறார். அந்த மாணவன் காஷ்மீரை சேர்ந்தவர். அவரின் பெயர் இக்பால் ரசூல் தர். என்னிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் நான் இதை சொல்லுகிறேன் (கணங்களில் ஒரு தீர்க்கம்). உதவி தொகை கிடைக்காததால் எனக்கு மனு அளிக்கப்படுகிறது. ஒரு தாயின் உணர்வோடு நான் அவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு கூடுதலான உதவி தொகை கிடைக்க என்னோட அமைச்சகம் உதவியது.” (கூச்சல்… ஆனாலும் தொடர்கிறார்…)

“இந்த அவையிலே என்னிடம் கேட்கிறார்கள் எந்த அதிகாரத்தில் நான் பல்கலைகழகத்திற்கு கடிதம் எழுதினேன் என்று?”

கூச்சல் தொடரவே, பிரச்சனைக்கு பதில் கூறுகிறேன் பொறுமையாக இருங்கள்… எங்களை பொறுமையற்றவர்கள் என கூச்சலிடும் நீங்கள் சிறிது பொறுமையாக இருங்கள், இல்லை என்னுடைய இடத்திலிருந்து ‘நான் ஒரு மிக மிக சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் புரிந்துள்ளதால் நானும் பாதிக்கப்பட்டவள், நான் ஒரு பெண் என்பதால் என்னை பேச விட மாட்டீர்கள்’ என கூறி ஒளிந்துகொள்ள வேண்டுமா? (ராகுல் காந்தி கூறிய ‘என்னை பேச விடமாடார்கள்’ என்பதற்கு பதில் உள்குத்து….). என்னிடம் உங்கள் அரசியல் விளையாட்டுகளை நிறுத்தி கொள்ளுங்கள். நான் எனது பதில்களை கூறுகிறேன். இதற்காக தான் பொறுமையாக இத்தனை நாள் காத்திருந்தேன்.

தொடர்கிறார்….

“நான் சர்வாதிகாரமாக பதில் அளிக்கிறேன் என கூறுகிறீர்கள். உங்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான். (கையில் இருக்கும் ஆவணகளை காட்டி) நான் பாராளுமன்றத்திற்கு ஆவணங்களுடன் வந்திருக்கிறேன்”.

எதிர் கட்சியினர் தொடர்ந்து கூச்சல். சபா நாயகர் அவர்களை அமரும் படியும், உங்கள் சந்தர்ப்பம் வரும் போது பேசும் படியும் உத்தரவிடுகிறார்.

தொடர்கிறார்…

“இது என்னுடைய கட்சி ஆட்சியின் போது நடந்த சம்பவம் இல்லை. முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நடந்ததை கூறுகிறேன். ஹனுமந்த ராவ் ஜி (காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்), – ஹைதராபாத் பல்கலை கழகத்தில் நியாயத்தின் தேவை என கடிதம் எழுதினார். நான் எனது கடமையின் காரணமாக கூறுகிறேன் – (நான் சொல்லப் போவதை கேட்டு சிரிக்காதீர்கள்!!!) ஹனுமந்த ராவ் ஜி அவருடைய குழந்தைக்கு பல்கலை கழகத்தில் இடம் வேண்டும் என கடிதம் எனக்கு எழுதுகிறார். கேந்திரிய வித்யாலயாவில் சேர்வதற்கு பப்பு யாதவின் (ராஷ்ட்ரிய ஜனதா தளம் – லாலு பிரசாத் யாதவின் கட்சி) கடிதம் காட்டட்டுமா நான்? இவர்களுக்கெல்லாம் ‘ஒதுக்கீட்டிற்கு’ வெளியே செய்து கொடுத்திருக்கிறேன். இப்போதாவது என் பதிலை கேளுங்கள். ஹனுமந்த ராவ் ஜி கடிதத்திற்கு பதில் சொல்கிறேன் – ஹைதராபாத் பல்கலைகழக துணை வேந்தரை நியமித்தது காங்கிரஸ் அரசு. அந்த துணை வேந்தரின் கீழ் இருக்கும் பல்கலைகழகத்தில் தான் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இது தெரிந்தும் ஹனுமந்த ராவ் ஜி என்னிடம் ‘நியாயம் வேண்டும்’ என எழுதுகிறார். ஹனுமந்த ராவ் ஜி பல பக்கங்கள் கொண்ட பதிலை பல முறை என் அமைச்சகம் அளித்திருக்கிறது. அது தான் இந்த ஆவணங்கள். முதல் நினைவூட்டல் 9-டிசம்பர்-2014, இரண்டாம் நினைவூட்டல் 4-செப்-2015, மூன்றாம் நினைவூட்டல் 30-செப்-2015, நான்காம் நினைவூட்டல் 6-அக்டோபர்-2015, ஐந்தாம் நினைவூட்டல் 20-அக்டோபர்-2015, ஆறாம் நினைவூட்டல் 29-நவம்பர்-2015, ஏழாம் நினைவூட்டல் 6-ஜனவரி -2016 என பலமுறை அவருக்கு நினைவு படுத்தியது இந்த அரசு. நடவடிக்கை எடுத்து பதில் அளிப்பார் என நம்பிக்கையின் காரணமாக இத்தனை நினைவூட்டல்கள் அனுப்பி காத்திருந்தோம். அப்படி இருக்கையில் கடிதம் எழுத எனக்கு என்ன அதிகாரம் எனக் கேட்கிறார்கள். காங்கிரஸ் அரசியல்வாதிகளின் தகுதியின்மையினை காட்ட இவ்வளவு ஆவணங்கள் உள்ளது. 5-மே-2011 அன்று நாராயணசாமி அமைச்சராக இருந்த காலத்தில், ஆவணத்தில் எழுதிய…” (கூச்சல் உயர்கிறது… சபா நாயகர் எதிர் கட்சியினரை அமரும்படியும் அவர்கள் அமர்ந்தால் தான் அவரால் சபையினை தொடர முடியும் எனவும் கூறுகிறார்).

“என் கடமையை செய்வதற்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என அழுத்தமாக ஸ்ம்ருதி இரானி கூறுகிறார்.

நாராயணசாமி ஜி அவர்களின் ஆவணம் இது. அப்போது எங்களின் ஆட்சி இல்லை. ஆனால், ஆவணத்தில் ஜனாதிபதியின் பெயர் போட்டு எழுதுகிறார் (வேறு ஏதோ கூச்சல் எழ, போங்கள் போங்கள் என்னுடைய பதிலை கேட்க உங்களுக்கு பிடிக்காது.உண்மைகளை கேட்க முடியாமல் புறமுதுகு காட்டி ஓடுகிறீர்கள்)

வெளி நடப்பு செய்கின்றனர் எதிர் கட்சிகள்.

தொடர்கிறார்…

சிந்தியா ஜி! அப்போது சொன்னீர்களே உட்கார்ந்து கேளுங்கள் என்று, இப்போது நீங்கள் உட்கார்ந்து கேளுங்கள். நான் என்னுடைய கடமையை செய்ய வந்திருக்கிறேன், ஆனால் என்னை இழிவு படுத்த வந்திருக்கிறீர்கள். அமேதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.

நாராயணசாமி ஜி அவர்களின் ஆவணம் இது… இவ்வாறான தகவலை 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று.

மீண்டும் கூச்சல் எழ – நான் கூறுவதை கேட்கின்ற தைரியம் உங்களுக்கு இல்லை என திரும்ப சாடுகிறார்.

தொடர்கிறார்…

ஒவைசி அவர்களும் நாங்களும் அரசியல் ரீதியாக இரு துருவங்களாக உள்ளவர்கள். பாராளுமன்றத்தை தவிர வேறு எங்கும் இருவரும் பார்த்தது கூட கிடையாது. ஆனால் ஒவைசி அவர்கள், எனக்கு கடிதம் எழுதுகிறார், ‘லெக்சரர் பதவி நியமனத்தில் மாபெரும் அநியாயம் நடக்கிறது’. அந்த கடிதத்திற்கு 17-அக்டோபர்-2014 மற்றும் 30-ஏப்ரல்-2015 ல் எனது அமைச்சகம் நிலைமை என்ன என கேட்டு பதில் அனுப்புகிறது.

பாராளுமன்ற நடவடிக்கை அமைச்சர் வெங்கையா நாயுடு மறித்து “அவர் தான் பெரிதாக செய்தேன் என கூறுவதற்காக இதை கூறவில்லை, ஆனால் இங்கே கேள்வி எழுப்பியவர்கள், அவரது அமைச்சகம் இதில் ஏன் தலை இடவேண்டும் என்பதற்கு பதில் அளிக்கிறார். அவர் கூற வருவது பல கட்சிகளிலிருந்து கடிதங்கள் எழுதப்பட்டன, அவை அனைத்திற்கும் பதில் கொடுத்திருக்கிறார். அதே சமயம் அவரும் ஒரு தாய். ஒரு தாயாக அவருக்கு ஏற்படும் சோகத்தினையும் முன் வைக்கிறார். அவரை தனிமை படுத்தவும் முயற்சிகள் நடந்தது. ஆகையால் அனைத்திற்கும் சேர்த்து பதில் அளிக்கிறார்.”

குரல் கம்ம ஸ்ம்ருதி தொடர்கிறார்

10-ஆகஸ்ட்-2015, கேரள முதல்வர் ஊமன் சண்டி, முன்னால் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த மனித வள மேம்பாட்டு அமைச்சர் சஷி தரூர் அவர்களும் கடிதம் எழுதினர், அதற்கு தேவையான வேலைகள் எடுக்கப்படிருக்கின்றன. பதில் கூறவில்லை என குற்றம் சாடும் நீங்கள் எங்களிடம் கற்று கொள்ளுங்கள்

இங்கே, சுகாதா ராய் (திரிணமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்) இப்போது வெளிநடப்பு செய்திருக்கிறார். மீண்டும் மீண்டும் பிரதீப் பாட்டச்சர்ஜி அவர்களும் கூறினார்- ரவீந்திரநாத் தாகூர் தான் விஸ்வ பாரதி என்ற அமைப்பை நியமித்தவர். அந்த விஸ்வ பாரதி பல்கலை கழகத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஒருவரை காங்கிரஸ் அரசு துணை வேந்தராக நியமித்தது. அவர்கள் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் பல்கலை கழகங்களை சீரழிக்கிறது என கூறுகிறவர்கள். எந்த கட்சி உறுப்பினர் பிரச்னையை முன் வைக்கிறார் என நான் பேதம் பார்த்ததில்லை. எந்த கோரிக்கையும் என் முன்னால் கொண்டு வரப்படும் போது உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இன்றைக்கு என்னை பேதம் பார்ப்பவள் என கூறுகின்றனர்? அவர்கள் கூறிய அதே தினத்தில் என்னாலும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூட்டி பதில் கூறியிருக்க முடியும். ஆனால் ஒரு குழந்தையின் மரணம் ஏற்படுகிறது (குரலில் ஒரு அழுகை), அந்த மரணத்தில் அரசியல் நடத்தப்படுகிறது. ரோஹித் வெர்முலா என்ற மாணவனை தங்கும் விடுதியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்த ஹைதராபாத் பல்கலை கழக நிர்வாக குழுவில் அங்கம் வகிப்பவர் முழுவதும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்க பட்டவர்கள். எங்கள் ஆட்சி ஒரு நிர்வாக குழு உறுப்பினரையும் நியமிக்கவில்லை. (கரகோஷம்)…

இருந்தும் அந்த நிர்வாக குழு முடிவு எடுக்கும் முன்னர் தலித் இனத்தை சேர்ந்த உறுப்பினர் யாரும் இல்லை என அறிந்து, தலித் இனத்தினை சேர்ந்த ஒரு உறுப்பினரை தற்காலிகமாக நியமித்து அதன் பிறகே முடிவு எடுத்தனர். நான் கூறுவது என்னவென்றால், ஜாதி, இனம் பார்த்து குற்றம் கூறாதீர்கள்.

நான் ஒரு குழந்தையை பற்றி பேசுகிறேன், தலித் இன மாணவன் என்ற முறையில் பார்கவில்லை. இங்கு இருக்கும் யாரேனும் விரல் நீட்டி “நான் ஜாதியின் அடிப்படையில் முடிவெடுக்கிறேன் என கூற தைரியம் உண்டா? என் பெயர் ஸ்ம்ருதி இரானி, என் ஜாதி என்ன என்று கூறுங்கள்?”

உங்களால் கூற முடியாது. நான் ஆவேசமாக ஏன் பேசுகிறேன் என்றால், பிள்ளை பெற்ற ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து பேசுகிறேன். அந்த ரத்தத்தில் குளிர் காய்ந்து அரசியல் செய்கிறார்கள் என்ற ஆவேசம். இது ஒரு தாயின் உணர்வு, உள்ளிருந்து வருவது. (குரலில் சிறு அழுகை). இதை சொந்த இழப்பாக கருதுகிறேன். ஏன் என உங்களுக்கு புரியும்.

தொடர்கிறார்…

இப்போது ஹைதராபாத் பல்கலை கழகத்தில் ரோஹித் மரணத்தின் போது நடந்தது என்ன என பிரமாணமாக கூறுகிறேன். கே. சந்திரசேகர ராவின் ஆட்சி. மாநில ஆட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், இருந்தும் அமைச்சகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்தேன். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகாமல் இருக்க வேண்டும் என உதவி கேட்க அழைத்தேன். சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் அதிகாரம்.

நான் தொலைபேசியில் அழைத்த போது அவரது (KCR) அலுவலகம் “ஐயா பிசியாக உள்ளார் இப்போது பேச முடியாது” என கூறிவிட்டனர். நான் அனுதாபம் பெற இதை கூறவில்லை. தொலைபேசி ரெகார்டில் பதிந்திருக்கிறது. அவரது (KCR) மகளிடமும் பேசினேன். இன்று வரை நான் காத்துகொண்டிருக்கிறேன், திரும்ப அழைக்கவே இல்லை. காபினெட் அமைச்சர் என்ற பொறுப்பிலிருந்தும் உதவி கோரி வேண்டினேன் ஒன்றும் பலனில்லை.

தெலுங்கானா காவல் துறை ஹைதராபாத் உயர் நீதி மன்றத்தில் பதிந்திருக்கின்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி – அதில் மாலை 5;20 மணிக்கு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தெலுங்கனா ராஷ்ட்ரிய கட்சி நண்பர்களுக்கும் இந்த ஆவணங்கள் அணுக முடியும். மேலும் காவல் துறை ஆவணத்தில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த பொழுது, அறையின் கதவுகள் திறந்திருந்தன, சுருக்கு கயிற்றிலிருந்து உடலை டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது. கைப்பட எழுதிய தற்கொலை குறிப்பில் யாரையும் குறை கூறவில்லை மேலும் என் தற்கொலைக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெளிவாக எழுதப்படிருந்தது. இது தெலுங்கனா காவல் துரையின் அறிக்கை.

இடையில் தெலுங்கானா கட்சியின் உறுப்பினர் மறித்து “அந்த தொலைபேசி வரும் போது நான் அங்கிருந்தேன். முதல்வர் வேறொரு முக்கிய சந்திப்பில் இருந்தார். ஆனாலும் உடனடியாக காவல்துறை புலனாய்வு துறை தலைவர் ஸ்ரீதர் ரெட்டியை அழைத்து உடனடி தகவல் தெரியபடுத்த KCR ஆணையிட்டார். 15 நிமிடங்களில் ஸ்ரீதர் ரெட்டி அவர்களும் இந்த சம்பவம் நடந்தது எனவும், இறந்தவரின் உடலை சுற்றி பெரும் கும்பல் சூழ்ந்து இருக்கிறது எனவும் கூறினார். கும்பலை அடக்குவதற்கு, KCR உடனே பா.ஜ பாராளுமன்ற உறுப்பினரான தத்தாத்ரேயாவை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். பிறகு உங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை ஆனால் KCR பிரதமரை சந்தித்த பொழுது ஸ்ம்ருதி இரானி அவர்களின் தொலைபேசி அழைப்பு மற்றும் தத்தாத்ரேயாவின் கைது பற்றிய நிலைமையை விளக்கினார். நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று.

ஸ்ம்ருதி தொடர்கிறார்…

தெலுங்கானா உறுப்பினரின் பேச்சிலேயே, தத்தாத்ரேயா குற்றவாளி இல்லை ஆனால் கும்பலை கட்டுபடுத்த செய்யப்பட்ட கைது என ஒப்புகொள்கிறார்.

மேலும் காவல் துறை அறிக்கையில் இந்த குழந்தைக்கு மருத்துவ உதவி ஒன்று கூட செய்யவில்லை. இதை காவல் துறை அறிக்கையே ஒத்து கொள்கிறது. அந்த முயற்சி எதுவும் எடுக்காமல், அவரது உடலை ஒளித்து வைத்து அரசியலை தொடங்கினர். எந்த ஒரு காவல் துறையினரையும் அடுத்த நாள் காலை 6:30 வரை உடலிற்கு அருகில் விடவில்லை. இது நான் கூறுவது இல்லை, தெலுங்கானா காவல் துறை கூறுவது.

காலை 6:30 வரை மருத்துவரோ காவல் துறை சேர்ந்தவரோ அனுமதிக்காதது அரசியல் செய்யவே. அங்கே கூச்சல் போட்ட கும்பல் ரோஹித்தை உயிர் பிழைக்க இல்லை, அரசியல் செய்வதற்கு மட்டுமே உபயோகபடுதினர். யார் அந்த குழந்தை இறந்து விட்டது என கூறியது? எந்த மருத்துவரோ, மருத்துவ தொழில் சேர்ந்தவரோ இல்லாத போது, அந்த குழந்தை இறந்து விட்டது என அறிக்கை கொடுத்தது யார்?

பல சமயங்களில், தற்கொலை செய்து கொள்ளும் போது முள் எலும்புகள் முறியாமல் நாடி குறைந்து உயிரினை திரும்ப கொண்டு வர முடியும்? மருத்துவ நிபுணர்கள் இதற்கு விடை தருவார்கள்.

நான் கூற விரும்பும் குற்றச்சாட்டு இதுவே – நிர்வாக குழு எங்கள் ஆட்சியில் நியமிக்கப்பட்டது அல்ல, காங்கிரஸ் ஆட்சியில்

சபையினரை நோக்கி கேள்வி – உங்களுடைய அரசியல் அனுபவத்தில் கூறுங்கள். ஒரே இடத்திற்கு ராகுல் காந்தி இரண்டு முறை எங்கேனும் சென்றதுண்டா? இல்லை, இல்லவே இல்லை

600 மாணவர்கள் இறந்தனர் தெலுங்கானா மாநிலம் உருவாகும் வன்முறையின் போது. அதற்கு ஒரு முறையாவது ராகுல் காந்தி சென்றாரா? இல்லை. ஆனால் இதில் அரசியல் நடத்த வழி கண்டுபிடித்திருக்கிறார். இந்த குழந்தையே தன் தற்கொலைக்கு காரணம் யாருமில்லை எனக் கூறும் போது, அதில் அரசியல் செய்வது மட்டுமே ஒரே நோக்கம் என்பது தான் மிக துயரமான ஒன்று.

மீண்டும் மீண்டும் எங்கள் ஆட்சி சிறுபான்மையினருக்கு எதிரானது, தலித் இன மக்களுக்கு எதிரானது என கூறும் உங்களிடம் பலப்பல முறை அவர்களுக்கு எதிராக என கேட்டுக்கொண்டும் நீங்கள் கேளாமல் பிரிவினை உண்டாக்குவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். உங்கள் தேசபற்றை நான் கேள்வி கேட்கவில்லை கேட்கவில்லை, ஆனால் என்னுடைய தேச பற்றை கேவல படுத்தாதீர்கள். உங்களது இந்தியாவினை சான்றளிக்கவில்லை, ஆனால் என்னை கேவலபடுத்த நீங்கள் யார்?

அடுத்த ஆவணம் ஒன்று… இது ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தினை பற்றியது.

அந்த பல்கலை கழக அனுமதி சீட்டு இது. இதில் உமர் காலீத் என்ற மாணவன் அரங்கத்தினை உபயோகிக்க கொடுத்த காரணம் – செய்யுள் படிக்க. உத்தரவு வழங்கும் போது பல்கலை கழகம் வேறு ஏதேனும் வேண்டுமா என்ற கேள்விக்கு ‘மைக் மற்றும் அதை உபயோகிக்க மின்சாரம் மட்டும் போதும் என உமர் காலீத் கைப்பட எழுதி வாங்கிய அனுமதி சீட்டு. இந்த படிவத்தினை பார்த்து பல்கலைகழகம் அனுமதி அளித்தது. இதற்கு பிறகு நடந்தது பலரும் பலவேறாக கேள்வி எழுப்புகின்றனர்.

தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத் பவார) சொல்கிறார் – முதலில் பல்கலைகழகம் அதன் விசாரணை நடத்தி முடிக்கட்டும், பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று. பல்கலைகழகத்தின் காவல் படையின் 11-2-2016 தேதி கொடுத்த ரிப்போர்ட் இது – இந்த படையில் 35 ஆண்களும், மூன்று பெண்களுமாக 38 பேர் கொண்ட துறை இது. இந்த படை பல்கலைகழகத்தினுடைய காவல் குழு, தில்லி காவல் துறை அல்ல. அவர்களின் கையெழுத்திட்ட இந்த அறிக்கையின் படி, அந்த படை மாலை 4:45க்கு அந்த இடத்திற்கு சென்று சேர்ந்தோம், கூட்டம் கூட தொடங்கியது.. மாணவர்கள் அனிர்பன் மற்றும் உமர் அங்கிருந்தனர்…

“அப்சல் குரு மற்றும் மக்பூல் பட் வாழ்க!
காஷ்மீர் விடுதலை பெரும் வரை போராடுவோம் போராடுவோம்!
இந்தியா உடையும் வரை போராடுவோம்!
ரத்தத்திலிருந்து பெற பட்ட காஷ்மீர் நமது ரத்தம் !
எங்களுக்கு வேண்டும் விடுதலை (காஷ்மீர் விடுதலை)!
துப்பாகியிலிருந்து வேண்டும் விடுதலை !
Go India Go Back !
இந்திய ராணுவம் ஒழிக!”
போன்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

மேலும் 2-3 பேர்களும் முகத்தினை மறைத்து துணி போட்டுக் கொண்டு இதை கோஷமிட்டு கொண்டிருந்தனர். இது வீடியோ மூலமாகவோ படங்களின் மூலமாகவோ கூறவில்லை, அவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்த ரிப்போர்ட். இது போலீசும் இல்லை, அர்னாப் கோஸ்வாமியும் இல்லை. அவர்களின் பாதுகாப்பு படை. அரசுக்கும் இந்த படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல்கலைகழத்தின் அலுவலக அறிக்கை (பல்கலைகழகத்தின் அனைத்து துறைகளையும் கட்டுபடுத்தும் நிர்வாகம், அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது).

இங்கே கம்யூனிஸ்ட் உறுப்பினர் கூறினார் – ஸ்ம்ருதி இரானி அவரது விருப்பதிர்க்கேர்ப்ப ஒரு துணை வேந்தரை நியமிக்க முயன்றார் என்று. ஆம் முயன்றேன் – அவர் பத்ம விருது பெற்றவர், அதுவும் காங்கிரஸ் ஆட்சியின் பொது பத்ம பூஷன் விருது பெற்றவர். எங்கள் அரசு கொடுத்த விருது அல்ல. இருப்பினும், ஜனாதிபதியின் அதிகாரம் அது, அவர் மறுக்கவே துணை வேந்தர் மாற்றப்படவில்லை. ஆகையால் அங்கிருக்கும் துணை வேந்தரும், கல்வியாளர்களும் எங்கள் ஆட்சியில் நியமிக்க படவில்லை. அவர்கள் அளித்த ஆணை. இந்த நிகழ்ச்சி கூறிய காரணதிற்காக கூடவில்லை, அரசியல் கூட்டமாக தான் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் தெரிந்து அனுமதி திரும்ப பெறப் பட்டது. இருப்பினும், இந்த நிகழ்ச்சியை நடத்தினர். இது பல்கலைகழக வளாகத்தினுள் சட்டம், ஒழுங்கு கெட வழி வகுத்தது. இந்த கூட்டத்தில் ஈடுபட்ட நபர்கள்
1) சயத் உமர் காலீத்
2) அனிர்பன் பட்டச்சார்யா
3) அசுதோஷ் குமார்
4) ராமா நாகா
5) அனந்த் பிரகாஷ் நாராயன்
6) கன்ஹையா குமார்
7) ஐஸ்வர்யா அதிகாரி
8) ஸ்வேதா ராஜ்

இவர்களின் தீவிர போக்கினை கண்டித்தும், விசாரணையினை முழுமையாக முடிக்கவும் மேற்கூறிய நபர்கள் படிப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செயப்படுகின்றனர். மேலும், அவர்கள் விடுதியினை விருந்தினர் போல பயன் படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது என ஆணை பிறப்பித்தது.

பல்கலைகழக பதிவாளரின் (நாங்கள் பணிக்கு அமர்த்தவில்லை, இவரும் காங்கிரஸ் ஆட்சியினால் அமர்த்தப்பட்டவர்) அறிக்கை கூறுவதாவது – இன்று மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில் “இந்தியாவிற்கு எதிராக பேசும் யாராக இருந்தாலும் அனைவரையும் தூக்கில் இடுங்கள், பேராசிரியர்கள் உட்பட” என கூறிச் சென்றார். 22-பிப்ரவரி-2013 நோட்டீஸ் இது (ஒரு காகிதத்தை காட்டி) – இரண்டு பேராசிரியர்கள் காஷ்மீர் ஒற்றுமை பேரணி நடத்துகிறார்கள் (காங்கிரஸ் ஆட்சியின் போது). அவர்கள் காஷ்மீரின் விடுதலை போராட்டதிற்கு துணை போவோம், இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்போம் என பேரணி நடத்துகிறார்கள். இன்னொரு பல்கலைகழக ஆவணம் – தூக்கு தண்டனையை விலக்க வேண்டும், உள் துறை அமைச்சகத்தின் (உள் துறை அமைச்சர் இல்லை, அமைச்சகம்) உருவ பொம்மையை எரிக்க வேண்டும். யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை எதிர்த்து நீதிமன்றங்களை கண்டிக்க வேண்டும். 12-மார்ச்-1993 – யார் மும்பையில் இருந்தனர்? என்னுடைய தாயின் பிறந்த நாள், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. தீவிரவாதிகள் கொடூர செயலை செய்வதற்கு முன் இந்தியர்களின் ஜாதி கேட்கவில்லை, மதம் கேட்கவில்லை.

மற்றொரு போஸ்டரில் உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்தியா – ஒரு ஹிந்து பாசிச நாடு என கூறியதோடு, இந்தியாவே யாகூப் மேமனை கண்டு நடுங்கியது, இங்கே உள்ள ஊடகங்கள் மதவாத நிறுவனங்கள், இந்தியா ஒரு தீவிரவாத நாடு, மனிதனை மனிதன் தின்னும் இந்த நாட்டில் வெறியினை தீர்த்துக்கொள்ள யாகூப் மேமனை தூக்கில் போன்ற வாசகங்கள். உச்ச நீதி மன்றத்தினை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை (கேலியாக சிரித்து விட்டு, அதே உச்ச நீதி மன்றத்தில் ஜாமீனுக்காக இப்போது)… இது தான் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆட்சி.

இங்கே இன்னொரு உறுப்பினர் கூறுகிறார் கண்ஹையா குமார் என்னுடைய மாணவர் பிரிவில் உறுப்பினர்…

இது இன்னொரு போஸ்டர். இதில், ஏன் தான் இந்த குழந்தைகள் இப்படி யாரோ ஒருவரின் பேச்சினை நம்பி இந்தியாவுக்கு எதிராக மாறத் துணிந்தான், இந்த குழந்தையின் மனதிலே இந்தியா ஒரு நாடு இல்லை என்ற நச்சு கலந்திருக்கிறார்கள் என்ற ஆதங்கத்துடன் படிக்கிறேன் – இதில் கண்ஹையா குமார், ஷைலார் ரஷீத், ராமா நாகா இவர்கள் பெயர்கள் எல்லாம் போட்டு அடிக்கப்பட்ட போஸ்டர். இன்னும் பல மாணவர்கள் கழகத்தின் உறுப்பினர்கள் பெயர்களுடன் இருக்கிறது. இதில், அப்சல் குருவினை தூக்கிலிட்டது காங்கிரஸ் ஆட்சி என 10-2-2016 நோட்டீஸ் கொடுக்கின்றனர். 9-2-2016 மனதில் உருவான ஐடியா, 10ம் தேதி அன்று வளாகம் முழுவதும் ஒட்டப்படுகிறது. மேலும் அதில் பொது மீட்டிங் தடைபட்டது – காரணம் மகிஷாசுர தியாக தினத்தால்.

அது என்ன மகிஷாசுர தியாக தினம் ?

எங்கள் ஆட்சியினை கேவலப்படுத்தும் இவர்கள் எனது பதிலுக்கு காத்திராமல் ஓடி போன சௌகதா ராய் மற்றும் சௌகதா பாசு ‘பேச்சு சுதந்திரத்திற்காக வாதாடிய அவர்களை பார்த்து கேட்கிறேன் – நான் கூறப் போவதை கொல்கத்தாவில் பப்ளிக் ஆக பேச முடியுமா? நான் கேட்க வேண்டியதெல்லாம் ‘துணிவிருந்தால் பேசி பாருங்கள்’ என்று

4-அக்டோபர்-2014 ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் SC/ST மற்றும் சிறுபான்மையினரின் மாணவர் சங்கம் கொடுத்த நோட்டீஸ் இது – 10-2-2016 நோடிசில் கூறிய மகிஷாசுர தியாக தினம் பற்றி இவர்கள் கொடுத்த நோட்டீஸ் (நான் வணங்கும் கடவுள் இதை படிப்பதற்காக என்னை மன்னிப்பாராக! என கூறிவிட்டு, படிக்கிறார்).

துர்கா பூஜா என்பது இந்தியாவிலேயே சர்ச்சைக்குரிய இனவாத திருநாள். வெள்ளை வெளேர் (தோலின் நிறம்) என அழகு படைத்த துர்கா கரு நிற தோல் கொண்ட மகிஷாசுரனை வதம் செய்வாள். மகிஷாசுரன், தன்மானம் மிகுந்த ஒருவன் – ஆர்யார்களால் ஏமாற்றி திருமணம் செய்து வைக்க ஆர்யர்கள் தேவ**வான துர்காவை கூலிக்கு வைத்தனர். அவள் மகிஷாசுரனை மயக்கி திருமணம் செய்து கொண்டாள். 9 நாட்கள் படுத்து மட்டுமே தேனிலவு கொண்டாடிய துர்கா ஒன்பதாம் நாள் தூக்கத்தில் இருந்த மகிஷாசுரனை கொன்றாள். இது தான் பேச்சு சுதந்திரமா? யாருக்கு இதனை கொல்கத்தாவின் தெருவினிலே விவாதிக்க துணிவிருக்கும்? இந்த பேச்சு சுதந்திரத்திற்கு ராகுல் காந்தி துணிந்து நிற்பாரா? இந்த மாதிரி மாணவர்கள்??

சில பேர் அவர்கள் சின்ன வயதுகாரர்கள், தவறு செய்து தான் கற்று கொள்வார்கள் என கூறும் போது நான் யோசிப்பதெல்லாம் இத்தகைய எண்ணம் சிறுவர்கள் மனதிற்கு போகிறது?

நான் கூறுவதை கேட்க காங்கிரஸ் உறுப்பினர் யாரும் இங்கு இல்லை ஆனால் எப்போதும் கூறுவது குழந்தைகளின் எண்ணத்தினை வைத்து அரசியல் செய்யாதே என்று கை வணங்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் கேட்க மறுக்கிறார்கள்.

வேறு வழி இன்றி நான் இதை இங்கு கூறுகிறேன். ஐரோப்ப தத்துவ ஞானி ஒருவர் கூறுகிறார் – ஒரு நாடு என்பது அதன் முட்டாள்களை தாங்கிக் கொள்ளும், பேராசைகாரனையும் தாங்கிக் கொள்ளும். ஆனால் துரோகிகளை உள்ளே வைத்துக்கொண்டு இருக்க முடியாது. வாயிலில் நிற்கும் எதிரியை கூட எளிதாக வீழ்த்திவிடலாம் (ஏனெனில் எதிரி அவனுடைய ஆயுதங்களையும், கொடியையும் வெளிப்படையாக வைத்திருப்பான்) ஆனால் துரோகி உள்ளிருந்தே அனைவருடனும் பழகுகிறான். அவன் கூறும் பொய்கள் எல்லா சந்து பொந்துகளிலும் கேட்கும். அரசரின் அவையில் கூட கேட்க வைப்பான். துரோகியானவன் பாதிக்கப்பட்டவரின் மொழியினை பேசுவான், அவனை போலவே நடிப்பான். துரோகி நாட்டின் ஆன்மாவினை ரகசியமாக கெடுப்பவன். அவன் நாட்டின் அரசியல் தன்மையை மாற்றி, நாட்டில் எதிர்ப்பே இல்லாத வகையில் மாற்றி அமைத்துவிடுவான். கொலைகாரனை விட துரோகி கொடியவன். நான் சாணக்யனை பற்றி பேசினால் RSS பற்றி பேசுகிறேன் என்கிறார்கள். ஆகையால் இத்தாலிய ஞானி கூறியதை கூறினேன்.

இந்தியாவின் குழந்தைகள் எங்கிருந்து கற்றுகொள்கின்றனர்? ஒரு தகவல் என்னுடைய பார்வைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன ஒன்று. இது நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையின் வரலாறு பாடப்புத்தகம். ஆசிரியர்கள் படிப்பதற்கு என. இதை வைத்து தான் ஆசிரியர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த புத்தகத்தை இயற்றியவர் டீஸ்டா செடல்வாட். இந்த புத்தகத்தை எழுத ஏற்பாடு செய்தவர் முன்னாள் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல். சோனியா காந்தியின் மேற்பார்வையில் எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை அப்படியே படிக்கிறேன். “நம்முடைய பாடத்தில் புராதன இந்தியாவையும் இடைக்கால முஸ்லிம் ராஜ்யங்களை சார்ந்து இருக்க வேண்டும் என்ற கொள்கையில் தான் கற்று தர வேண்டும். மும்பை தாதர் பகுதியில் இருக்கும் டான்-பாஸ்கோ பள்ளியிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தகம் (சக அமைச்சராக பணியாற்றும் பியூஷ் கோயல் படித்த பள்ளிக்கூடம்). அதில், நாம் அக்பர், சிவாஜி, ஔரங்கசீப் பற்றி கற்றுகொடுக்கையிலே – அவர்கள் அனைவரும் தரமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என கூறினால் மட்டும் போதாது நாம் கேள்வி கேட்க வேண்டும் எந்த சிவாஜியினை வகுப்பறைக்குள் கொண்டு செல்ல வேண்டும்? என்று

சிவாஜியின் வரலாறு பற்றி மட்டும் இவர்கள் எழுதவில்லை, காங்கிரஸ் அரசியல்வாதிகள் சீக்கியர்கள் கொன்ற கலகத்தில் மூன்று நாட்கள் வேடிக்கை பார்த்தனர் என்றும் சொல்லி கொடுகிறார்கள் . கன்னியாகுமரியில் ஹிந்து-கிறித்துவ கலகம் என்ற பெயரில் ஹிந்து ஆதிக்கம் எப்படி சிறுபான்மை கிறித்துவர்களை இலக்காக கொண்டுள்ளது எனவும் கற்று தரப்படுகிறார்கள். இவையெல்லாம் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு சொல்லி தருகிறது நமது கல்வி. இது தான் காங்கிரஸின் மதசார்பில்லா கல்வி.

ஆறாம் வகுப்பு வரலாற்று பாடத்தில் – காஷ்மீர் அரக்கர்கள் நிறைந்த பகுதியாகிவிட்டது. மாநில அரசு மத்திய அரசின் அட்டூழியங்களை எதிர்த்து போராடுகிறது. (குரலில் அழுகை). ஆறாம் வகுப்பு மாணவனுக்கு இப்படி கற்று தருகிறோம். இப்படி கற்று தந்த மாணவர்கள் பல்கலைகழகத்தில் காஷ்மீரின் விடுதலை கிடைக்கும் வரை போராடுவோம் என ஏன் கூற மாட்டார்கள்?

இன்னொரு சான்று – தில்லியில் உள்ள பள்ளிகூடங்களுக்கு உத்தரவுகள் பிறபிக்கப்பட்டன. ஆங்கில ஆசிரியர் மாணவர்களுக்கு கொடுக்கும் “வார்த்தை கூறுகிறேன், வாக்கியம் எழுது”. வார்த்தை – வருகை. ஆசிரியருக்கு பயிற்சியாக கொடுத்த வாக்கியம் “சீக்கியர்கள் தில்லிக்கு வருகை தந்த போது அவர்களை ஹிந்துக்கள் கொன்றனர்”.

மஹாராஷ்டிராவிலே அனைத்து பள்ளிகளிலும் வரலாற்று பாடத்திலே சிவாஜியை பற்றிய ஒரு பாடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒரு பாடத்தினை படித்துவிட்டு முஸ்லிம் மாணவர்கள் அதிகம் சேரும் ஒரு பள்ளியில் இருக்கும் ஆசிரியர் இதை கூறுகிறார் – சிவாஜிக்கும் அப்சல் கானுக்கும் நடக்கும் மோதல் பற்றிய பாடத்தினை கற்று தரும் போது நான் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தொடங்குகிறேன். அந்த பாடத்தில் அரசியலும், சமூகத்தை பற்றியும் வேறு விதமாக எழுதப்படிருக்கிறது. முஸ்லிம் மாணவர்களின் கண்களை பார்த்து சொல்லி தர முடியாத பாடம். அந்த ஆசிரியரிடம் நான் கூறியது ‘முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியா’ என்ற முறையில் சொல்லி தராதீர்கள் என கெஞ்சி கேட்டுக்கொண்டேன். நமது குழந்தைகள் அரசியல் செய்வதற்கு இல்லை என கெஞ்சினேன். எல்லோரும் கேட்க மறுத்து விட்டனர். அந்த பாடத்தினை NCERT கற்று தராதீர்கள் என பாடம் கற்று தரப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில். NCERT அப்போது எங்கள் ஆட்சியில் இல்லை.

இவைகளை ஆராய ஒரு கமிட்டி நிறுவினோம். அந்த கமிட்டியில் முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஒரு துணை வேந்தரும் இருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த ஒருவரும் கூட. இன்னொருவர் வருவாய் துறை அதிகாரி. காங்கிரஸ் ஆட்சியில் வருவாய் துறையில் வேலை செய்தவர், தற்போது உச்ச நீதி மன்ற வக்கீல். நான் அதை செய்வதற்கு காரணம் – அரசியல் நோக்குடன் பணி செய்கிறேன் என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்று. அந்த கமிட்டி ஆராய்ந்த பிறகு கூறியது – இதனை படிப்பதினால் யாருக்கு என்ன பயன்? பாகிஸ்தானி எழுத்தாளர்கள் இந்திய குழந்தைகளுக்கு பாடமாக எழுத வேண்டிய அவசியம் என்ன? ஒரு பாகிஸ்தானி எழுத்தாளரின் பாடத்தில் அப்பட்டமாக “பாகிஸ்தானில் அல்லாவின் படைகள், ஹிந்துத்வா நரகம் இந்தியாவில்” என எழுதி இருக்கிறது.

மேடம்! (சபா நாயகரை) நான் எந்த ஒரு கேள்விக்கும் மக்களவையிலாகட்டும், மாநிலங்களவையிலாகட்டும் பதில் அளிக்காமல் இல்லை. என் வேண்டுகோள் இது மட்டுமே!!!

பல்வேறு பல்கலைகழகங்களில் துணை வேந்தர்கள் அவர்களுடைய பல்கலைகழக கொடியினை பெருமையாக ஏற்றுவோம் என கூறினர். அவர்களை கண்டனம் செய்தோம். ஆனால் உத்திரப்ரதேசம் சென்ற ராகுல் காந்தி அங்கிருக்கும் பல்கலை கழகத்தில் ‘எல்லா துணை வேந்தர்களும் RSS ஆட்கள்’ எனக் கூறுகிறார். அவருக்கு தெரியாது. இப்போதும், மத்திய பல்கலை கழகங்களில் 20 துணை வேந்தர்கள் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்க பட்டவர்கள். 16 துணை வேந்தர்களை எங்கள் ஆட்சியில் நியமிக்கப் பட்டுள்ளனர். காங்கிரஸ் நியமித்த ஒரு துணை வேந்தர் ஒருவர் வந்து என்னிடம் ‘நான் அவர்கள் பணியில் தலையிடுகிறேன்’ என்று கூறட்டும், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். இதே சபையிலே, சோனியா காந்தி இங்கு இல்லை ஆகையால் அவரிடம் கூற முடியாது.

ஆனால் வாஜ்பாயி ஜி கூறினார் – ‘இந்தியா ஒட்டு போட்ட நிலங்கள் கிடையாது. ஜெயித்தவர்கள் வாழும் ஒரு நாடு. வந்தனம் கூறுவோம் வாழ்த்துக்கள் கூறுவோம், இது அர்ப்பணம் செய்யும் பூமி, இது முன்னோர்களை நினைக்கும் பூமி. ஒவ்வொரு நதியும் கங்கா நதி இங்கே, சிறிய சிறிய விஷயமும் கடவுள் இங்கே. நாம் வென்றாலும் இந்தியாவுக்காக வீழ்ந்தாலும் இந்தியாவுக்காக. வீழ்ந்த பிறகும் கங்கையில் அஸ்தியை கரைப்போம், அப்போதும் காதுகளில் ஒலிக்கும் ஒரே சொல் ‘பாரத் மாதா கி ஜே!’. (கை தட்டல்கள்)

இப்படி கூறிய வஜ்பாயீ ஜி இந்திரா காந்தியிடம் கேட்டது – துர்காவின் ஸ்வரூபம் தெரியுமா? அதற்கு இந்திரா காந்தியின் பதில் “செல்லுங்கள், மனித நேயத்தை காப்பற்றுங்கள்”.

நான் இன்று காண்பது விநோதமாக இருக்கிறது. அரசியல் நேருக்கு எதிராக கொள்கை கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும் இணைக்கிறது. சுகாதா போஸ் செய்த உரை மிக நன்றாக இருந்தது. அதற்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மிகுந்த வரவேற்புகளை பொழிந்தனர். கை குலுக்கி மகிழ்ச்சியினை தெரிவித்து கொண்டனர். திரு. சுகாதா போஸ் ஒரு புத்தகம் அன்பளிப்பாக வழங்க காத்திருந்தார். அந்த புத்தகத்தை எழுதியது டாக்டர்.ஷர்மிளா போஸ். ஷர்மிளா போஸ் என்பவர் யார்? சுகாதா போஸ் அவர்களின் தமக்கை. பெரும் வரலாற்றாசிரியர். அவர் பரிசளித்த அந்த புத்தகத்தில் ஷர்மிளா போஸ் எழுதுகிறார் – வங்காள தேசத்துடன் நடந்த போர் ஒரு போலி. பாகிஸ்தான் ராணுவம் வங்காள நாட்டிற்கு எந்த தீங்கும் செய்யவில்லை ஆனால் இந்திரா காந்தி அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார் என எழுதுகிறார்.

இந்தியாவில் இந்த மாதிரி வாக்கு வாதங்கள் வந்ததுண்டு ஆனால், இந்திரா காந்தியோ அவரது மகனோ இந்தியா சிறிய துகள்களாக மாற்றித்தான் பார்த்திருக்கின்றனர்.

இதனாலேயே என்னுடைய ஆத்திரம், அகங்காரம் – வெங்கையா ஜி சொன்ன மாதிரி எந்த ஒரு குழந்தையின் மரணம் ஏற்பட்டாலும், 2012 ல் UGC யின் செயல்பாட்டில் கூறப்பட்டது “பாகுபாடு பார்க்க மாட்டோம்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்கள் ஆட்சியில் நீதித்துறை கமிஷன் செயலாக்கப்பட்டது. எந்தெந்த குழந்தைகள் அவர்களுக்கு தேவையான கல்வி அறிவு கிடைக்கவில்லையோ (காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது போல் இல்லை), பேதம் இல்லாமல் அரசியல் செய்து குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கவே செய்திருக்கிறோம். என்னுடைய சூளுரை இதுவே! குழந்தைகளை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால், ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் என்ன? இந்தியாவின் சிதைவின் பக்கம் என்னுடைய வாதத்தை கொண்டு சென்றிருப்பேன். ஒரு குழந்தையின் மரணத்தில் அரசியல் செய்வதை நிறுத்தவே நான் பாடு படுகிறேன்.

ஆகையால், கை குவித்து கேட்கிறேன் – நியாயமான விஷயங்களில் அரசியல் செய்யுங்கள், குழந்தைகளின் சடலங்களின் மேல் அல்ல. காவல் துறை இருக்கும் இடங்களில், அவர்களின் வேலையினை செய்ய விடுங்கள். இன்று ராகுல் காந்தி என்னிடம் கேட்கிறார் ‘நாம் இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் சேர்ந்து மாணவர்களை சந்திப்போம்’ என்று. இந்தியாவை சுக்குநூறாக பிரிக்க நினைக்கும் கூட்டத்துடன் கை கோர்க்கும் ராகுலுடனொ, இந்தியாவின் மூவர்ண கொடியின் கீழோ மாணவர்களை சந்திப்போம் என நான் கூறும் போது உங்களுக்கு அவமானமாக படுகிறது. அதே ஜவஹர்லால் பல்கலை கழகத்தில் ராகுல் காந்தி செய்தாரா? (குரல் கம்முகிறது)… அப்படி செய்யவில்லை அவர்.

எந்த ஒரு குழந்தை கல்வி கற்பதற்காக இருக்கிறதோ, அந்த குழந்தையின் குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் என்னிடம் வாருங்கள். என்னால், என் பதவியினால் முயன்ற எதுவாக வேண்டுமானாலும் செய்து தருகிறேன்

நன்றி மேடம் (சபா நாயகர்)!!!

கரகோஷம்….

ஸ்மிருதி இரானி உரையின் தமிழாக்கம்: கோவிந்தன் தேசிகன்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories