காஷ்மீருக்காகத்தான் இந்தியா போராடுகிறது; காஷ்மீரிகளுக்கு எதிராக அல்ல!

இந்தியா

modi rajastan - 2026

காஷ்மீருக்காகவே போராட்டம் நடப்பதாக பிரதமர் மோடி பேசினார்.

காஷ்மீருக்காகத் தான் இந்தியா போராடுகிறது. அம்மாநில மக்களுக்கு எதிராக இல்லை என்று பிரதமர் மோடி தெளிவாகக் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது :

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது !

காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது  !

வீரர்கள் மீதும் அரசு மீதும் அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும் !

பயங்கரவாத தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தால், உலகில் அமைதி என்பது சாத்தியமில்லை !

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது! இதில், முழு சக்தியுடன் இந்தியா முன்னணியில் உள்ளது !

காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டுள்ளனர் !அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர்!

காஷ்மீருக்காக தான் நாம் போராடுகிறோம். அம்மாநில மக்களுக்கு எதிராக modi in rajanstan - 2026போராடவில்லை!

 

காஷ்மீர் மக்கள், இந்தியாவில் எங்கும் தாக்கப்படாமல், அவர்களைக் காக்க வேண்டியது நமது கடமை. காஷ்மீர் மக்கள் தாக்கப்படும் சம்பவம், இனி எங்கும் நடக்கக்கூடாது !

பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத் தான் நாம் போராடி வருகிறோம். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில், தீவிபத்து ஏற்பட்ட போது, பாதிக்கப் பட்டவர்களுக்காக, ரத்தம் வழங்க காஷ்மீர் மக்கள் ஏராளமானோர் முன்வந்தனர்!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது!!

இந்தியாவின் முடிவால், பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது . காஷ்மீர் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தலைமைக்கு ஏற்பட்ட சோதனை!

பயங்கரவாதத்திற்கு எதிராக பேசியவாறு இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

-என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.