விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடக்கம்!

இந்தியா லைஃப் ஸ்டைல்

modi in up kjissan - 2026

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயன்அடைவார்கள் என்றும் இதற்காக மத்திய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தது மத்திய அரசு.

இதன், முதல் தவணையாக தலா ரூ.2,000 இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகப் போடப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி தொடங்கும் முன்னதாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழக்கமான, ஜெய் ஜவான் , ஜெய் கிசான் என்ற கோஷத்தை மூன்று முறை உச்சரித்துப் பேச்சைத் தொடங்கினார்.

பிப்ரவரி 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஒரே மாதத்தில் செயல் வடிவம் பெறுகிறது. இது புதிய இந்தியாவின் புதிய கலாச்சாரம் என்று கூறியுள்ளார் மோடி.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள், கோரக்பூரில் பிரதமரியின் விவசாயிகள் உதவித் தொகைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறேன், இந்தத் திட்டம் நாட்டுக்கே உணவு வழங்கும் கோடிக்கணக்கான கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

#PMModi #Farmers

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.