மார்ச் 5 முதல்… கொல்லம் – சென்னை எழும்பூர் தினசரி ரயில்!

Published:

thenmalai rail - 2026

கொல்லம் – தாம்பரம் ரயில், வரும் மார்ச் 5 முதல் தினசரி ரயிலாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகத்தின் செங்கோட்டை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயிலாக வாரம் 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் இனி சென்னை எழும்பூர் வரை நீட்டிப்பு செய்யப் பட்டு, தினசரி ரயிலாக இயக்கப் படவுள்ளது.

கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம், மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர் வரையிலான தினசரி ரயிலாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் – கொல்லம் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர்  வழியாக, வரும் 5ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயிலாக 14 பெட்டிகளுடன் இயங்கவுள்ளது.


உங்களுக்காக.. இதையும் படிக்கலாமே! [su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”73″ order=”desc”]

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இந்த ரயிலின் நிறுத்தங்கள் நேரம் குறித்த விவரம்:

ரயில் எண் 16101 தினசரி மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 5.10க்கு செங்கோட்டை வந்தடையும். காலை 8.45க்கு கொல்லம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ரயில் எண் 16102 கொல்லத்தில் இருந்து தினசரி முற்பகல் 11.45க்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு 3.10க்கு வந்தடைந்து மறுநாள் அதிகாலை 3.30க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்!

இந்த ரயிலின் நேரம், இடம் குறித்த விவரங்கள்:

kollam - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img