மக்களவைத் தேர்தல்’ முதல் கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்! வாக்களிக்கும் கடைமையைச் செய்ய மோடி அழைப்பு!

Published:

voting mohanji - 2026

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் செயலர் சுரேஷ் பையாஜி ஜோஷி ஆகியோர் இன்று காலை நாக்பூரில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். நாக்பூரில் உள்ள பாவ்ஜி தப்தாரி பள்ளியில் அமைக்கப் பட்டுள்ள 216 வது எண் வாக்குச்சாவடியில் இன்று காலை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது நமது கடமை. ஒவ்வொருவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மக்களவைத் தேர்தல் 2019ல், நாடு முழுவதும் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் துவங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது.

7 கட்டமாக நடக்கும் இந்தத் தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்றைய களத்தில்1,279 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.,சிங், கிரன் ரிஜுஜூ ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபைக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்றைய தேர்தலில் 14.20 கோடி பேர் வாக்களிக்கின்றனர்.

தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் இன்று மக்களவைத் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக முதல் ஓட்டு செலுத்தவிருக்கும் இளைய தலைமுறையினர் பெருவாரியான வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

பாஜக தலைவர் அமித்ஷா கூறியபோது, ஜனநாயக கடமையை தவறாமல் மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img